நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் மெரினா கடற்கரையில் 80 கோடி ரூபாய் செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் கட்டப்பட்ட ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து இன்று ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக இன்று திறந்து வைத்துள்ளார். எனவே அதிமுகவினர் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ஜெயலலிதாவின் இரண்டு நினைவிடங்களும் அடுத்தடுத்த நாட்களில் வரிசையாக தமிழக முதல்வர் திறந்து வைத்தது, அதிமுகவினருக்கும் பொதுமக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வேதா இல்லத்தில் ஜெயலலிதா பயன்படுத்திய புத்தகங்கள் மற்றும் அவருடைய புகைப்படங்கள் அனைத்தையும் பார்வையிட்டார் தமிழக முதல்வர். இந்த நிகழ்வில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்பு சென்னை மெரினா கடற்கரையில், தமிழக உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்ட மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் 9 அடி முழு உருவ சிலையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திறந்து வைத்தார்.
எனவே அதிமுகவினர் நீண்ட நாளாக எதிர்பார்த்த ஒவ்வொரு செயலையும் தற்போது எடப்பாடியார் ஒவ்வொன்றாக வரிசையாக நிறைவேற்றி வருவது அதிமுகவினர் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதுமட்டுமில்லாமல் இன்று திறந்து வைத்த போயஸ்கார்டனில் உள்ள வேதா இல்லத்தை அதிமுக தொண்டர்கள் தங்களது கோவில் என்று பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர்.