திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ரிலீசுக்கு முன்பே சூர்யாவை வைத்து கல்லா கட்ட ப்ளான் போட்ட சன் டிவி.. அதுக்குன்னு இப்படியா.!

அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சூர்யா, பிரியங்கா அருள்மோகன், வினய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் பிப்ரவரி முதல் வாரத்தில் திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா பரவலின் காரணமாக தியேட்டர்களுக்கு வரும் பார்வையாளர்கள் கணிசமாக குறைக்கப்பட்டதால் இப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.

இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு குறித்த தளர்வுகள் அறிவிக்கப்பட்ட உடனே இந்த திரைப்படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் தயாராகி வருகிறது. அதுவும் இந்த பிப்ரவரி மாதத்திலேயே இந்த திரைப்படத்தை வெளியிட வேண்டிய கட்டாயத்தில் சன் பிக்சர்ஸ் இருக்கிறது.

ஏனென்றால் படம் பிப்ரவரியில் ரிலீஸ் ஆனால் தான் ஏப்ரல் 14ஆம் தேதி அதாவது தமிழ் வருடப்பிறப்பு அன்று இந்த படத்தை சன் டிவியில் ஒளிபரப்ப முடியும் என்று சன் டிவி பிளான் செய்கிறது. இதனால் தியேட்டர்கள் குறித்த தளர்வுகள் எப்போது அறிவிக்கப்படும் என்று படக்குழு ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறது.

மேலும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் அனைத்து உரிமைகளும் சன் டிவி வசம்தான் இருக்கிறது. இதனால் படம் தியேட்டரில் வெளியான சில நாட்களுக்குப் பிறகு சன் டிவியின் ஓடிடி தளமான சன் நெக்ஸ்ட்டில்  இப்படம் வெளியாக இருக்கிறது அதை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்ப வேலைகள் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தீபாவளி வெளியீடாக வந்த அண்ணாத்த திரைப்படம் பொங்கலுக்கு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இதனால் சன் டிவியின் டிஆர்பி எகிறியது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே சன் பிக்சர்ஸ் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை விரைவில் வெளியிட பிளான் செய்து வருகிறது.

Trending News