புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர், மரண பயத்தை காட்டிய நபர்.. நடுரோட்டில் சம்பவம் செய்த ஈரமான ரோஜாவே நடிகை

Eeramana Rojave Actress: எல்லாத்துறையிலும் இப்போது அட்ஜஸ்ட்மென்ட் என்ற டார்ச்சர் சகஜமாகிவிட்டது. அதிலும் சினிமா துறையில் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் மட்டுமே வாய்ப்பு என்ற எழுதப்படாத சட்டமும் இப்போது உருவாகிவிட்டது. அந்த வகையில் ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை ஒருவர் தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஈரமான ரோஜாவே தொடர் மிகப்பெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஹீரோவுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் மீனா வேமுரி. பல சீரியல்களில் அம்மா, வில்லி போன்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் ஒரு சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார்.

Also read: குணசேகரனை கேள்வி மேல் கேள்வி கேட்டு திக்கு முக்காடா ஆக்கிய கரிகாலன்.. ஈஸ்வரியை பொண்ணு கேட்டு போன ஜீவானந்தம்

அதில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை சந்தித்திருக்கிறீர்களா என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மீனா தனக்கும் இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் சினிமா வாய்ப்புக்காக சிலர் போன் செய்து பேசும் போது இந்த அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கேட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு சிலர் பேசும் போதே அவர்களுடைய எண்ணம் எனக்கு தெரிந்து விடும். அதனால் நான் அவர்களை பேசவிடாமல் எனக்கு இதில் விருப்பம் கிடையாது என்று போனை கட் செய்து விடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி தனக்கு ஒருவர் மரண பயத்தை காட்டிய சம்பவத்தையும் அவர் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

Also read: உடல் சுகத்திற்காக கல்யாணம் செய்து கழட்டிவிட்ட விஜய் டிவி நடிகை.. எல்லை மீறிய பயில்வான்

அதாவது இவர் ஒரு முறை காரில் சென்று கொண்டிருக்கும் போது தவறாக காரை திருப்பி இருக்கிறார். இதனால் பின்னால் காரில் வந்து கொண்டிருந்த ஒருவர் திடீரென இவரை ஓவர் டேக் செய்து காரை நிறுத்தி இருக்கிறார். இந்த எதிர்பாராத செயலால் மீனா பெரிதும் அதிர்ந்து போயிருக்கிறார். அதை தொடர்ந்து வண்டியிலிருந்து இறங்கிய இவர் சம்பந்தப்பட்ட அந்த நபரை நடுரோடு என்று கூட பார்க்காமல் பளார் என்று அறைந்து இருக்கிறார்.

அதைத்தொடர்ந்து பிரச்சனை பெரிதாகி இருக்கிறது. பிறகு அங்கு இருந்தவர்கள் சமாதானப்படுத்தி இவரை அனுப்பி வைத்தார்களாம். இந்த விஷயத்தை தற்போது கூறி இருக்கும் மீனா எனக்கு மரண பயத்தை காட்டியதால் மட்டுமே நான் அவரை அடித்தேன் என்று கூறியிருக்கிறார். இவ்வாறாக அவர் தன் சொந்த வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் பற்றி மட்டுமல்லாமல் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்தும் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

Also read: சும்மா இருந்த கேப்டனை சொறிஞ்சு விட்ட விஜய் டிவி.. நாக்கை துருத்திக் கொண்டு வெளுத்து வாங்கிய சம்பவம்

Trending News