புதன்கிழமை, ஜனவரி 15, 2025

8வது நாளும் கோடியில் வசூல் செய்த மாதவன்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

மாதவன் முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட். விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் நம்பி நாராயணனாக மாதவனும், அவரது மனைவியாக சிம்ரனும் நடித்திருந்தனர்.

இப்படத்திற்காக மாதவன் பிரமாண்டமாக பிரமோஷன் செய்து வந்தார். அதிலும் மாதவன் கெட்டப் பார்ப்பதற்கு அப்படியே நம்பி நாராயணன் போலிருந்தது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது. ராக்கெட்ரி படம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக உருவாக்கியிருந்து.

இந்நிலையில் ஜூலை ஒன்றாம் தேதி உலகம் முழுவதும் ராக்கெட்ரி படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இப்படத்தில் தமிழ் பதிப்பிற்காக சூர்யாவும், ஹிந்தி பதிவிற்காக ஷாருக்கானும் கேமியோ தோற்றத்தில் நடித்திருந்தனர். கடைசியாக மாதவனை பேட்டி எடுக்கும் கதாபாத்திரத்தில் இவர்கள் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இப்படம் வெளியான மூன்று நாட்களிலேயே இந்தியாவில் மட்டும் 8,70 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது. அதாவது ஜூலை 2ஆம் தேதி 3 கோடியும் அதற்கு மறுநாள் 3.75 கோடியும் வசூல் செய்திருந்தது. தொடர்ந்து இப்படத்திற்கு நேர்மையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

தற்போது இப்படம் ஒரு வாரத்தை நெருங்கியும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படம் வெளியாகி ஒரு வாரம் முடிந்த நிலையில் வெள்ளிக்கிழமை நேற்று 8 ஆம் தேதி மட்டும் ஒரு கோடி வசூல் செய்துள்ளது. தற்போது வரை ராக்கெட்ரி படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இதுவரை 15 கோடிக்கு மேல் வசூல் செய்த ராக்கெட்ரி படம் இன்னும் சில நாட்களில் 25 கோடி வரை தொடலாம் என கூறப்படுகிறது. ஏனென்றால் நாளுக்கு நாள் ராக்கெட்ரி படத்தின் வசூல் எகிறிக் கொண்டே போகிறது. படத்தின் விமர்சனத்தால் மக்கள் கூட்டங்கள் தொடர்ந்து திரையரங்குகளை நோக்கி வர தொடங்கியுள்ளனர்.

Trending News