மோடிக்கு வாழ்த்து தெரிவித்த எலன் மாஸ்க்.. இது அல்லவா சாதனை!

modi-musk
modi-musk

Narendra Modi: டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான எலன் மாஸ்க் மோடியை வாழ்த்தி பதிவு போட்டிருப்பது இப்போது பலராலும் கவனிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி அரசியலில் பயங்கரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இப்போது உள்ள தொழில்நுட்பத்திற்கு மக்களிடம் ஒரு விஷயத்தை எளிதில் கொண்டு செல்வது ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் தான். அந்த வகையில் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் சற்று அதிக ஆர்வம் காட்டக்கூடியவர்.

மோடியை பின்தொடரும் 100.2 மில்லியன் ஃபாலோவர்ஸ்

narendra-modi
narendra-modi

உலக தலைவர்களில் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் 100.2 மில்லியன் ஃபாலோவர்ஸ் பெற்றிருக்கிறார். இதனால் எலன் மாஸ்க் மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதோடு தற்போது துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது 11.2 மில்லியன் மற்றும் போப் பிரான்சிஸ் 18.5 மில்லியன் ஃபாலவர்களையும் பெற்றிருக்கின்றன.

கிரிக்கெட் வீரர் விராட் கோலி 64 மில்லியன் பிரேசில் கால் பந்து வீரர் நேய்மர் 63.6 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். இவர்களை எல்லாம் காட்டிலும் மோடி முன்னிலையில் இருந்து வருகிறார். கடந்த மூன்று வருடங்களாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் 30 மில்லியன் பயனிலாளர்கள் அதிகமாக பெற்றிருக்கிறார்.

சமீபத்தில் நடந்த தேர்தலில் வாக்குகள் வைத்து பார்க்கும் போது மோடி பின்தங்கி உள்ளார் என்று விமர்சனம் வைக்கப்பட்டது. ஆனால் சமூக வலைத்தளத்தில் அவரை பின்தொடர்வோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

Advertisement Amazon Prime Banner