வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

முதலமைச்சர் வகுத்த தேர்தல் வியூகம்.. சுமூகமாக கையாளும் எடப்பாடியாரின் சாமத்தியம்!

வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்கள் கூட்டணி கட்சிகளை உறுதி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் அதிமுக கட்சியின் கூட்டணி கட்சியான பாமக, பாஜக உடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை சுமுகமாக நடத்தி முடித்துள்ளது.

அதேபோன்று பிடிவாத நிலை காரணமாக தேமுதிகவின் கூட்டணி வெளியேற்றம் ஆகிய அனைத்தும் அதிமுகவிற்கு தேர்தல் களத்தின் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சூழ்நிலையில் எதிர்க்கட்சியான திமுகவும், தன்னுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு செய்து வருகிறது.

EPS

இருப்பினும் முதலமைச்சர் தமிழக முதல்வர் தனது சாமர்த்தியத்தால் கூட்டணிக் கட்சிகளிடையே சுமூகமான நிலையை உருவாக்கி, தொண்டர்களுக்கும் பாதிப்பில்லாமல் கவனத்துடன் தொகுதி பங்குகளை கையாண்டு வருகிறார்.

அதைப்போல் ‘வழியை விடு காற்று வரட்டும்’ என்ற பாணியில் தன்னுடன் கூட்டணி வைத்துக் கொள்ளாத கட்சிகளைப் பற்றி கண்டு கொள்வதும் இல்லை. அதே சமயத்தில் தன்னுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் கட்சிகளை வித்தியாசமான வியூகத்தி கையாண்டு வருகிறது.

Trending News