தமிழ்நாட்டில் கொரோனா 2 அலை படுதீவிரமாக வருவதால் தமிழ்நாடு அரசு தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களை தவிர வேறு எதற்கும் பொதுமக்கள் வெளிவரக் கூடாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதனால் பல மக்களும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் தமிழ்நாடு அரசு கொரோனாவை தடுப்பதற்காக வீட்டிற்கே தடுப்பூசி வரும் என தெரிவித்துள்ளது.
தற்போது வீட்டிலேயே இருப்பதால் எப்படி மின்கட்டணத்தை இந்த மாதம் செலுத்த முடியும் என பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். இதனை பார்த்து தமிழக அரசு தற்போது அதற்கு ஒரு வழியை கூறி உள்ளது.
அதாவது நீங்களே இந்த மாதத்திற்கான மின் கட்டணத்தை கணக்கிட்டு இணையதளம் வழியாக செலுத்தலாம் என கூறியுள்ளது. மேலும் மின் கட்டணத்தை சுயமாக கணக்கிட்டு மின்சார வாரிய ஊழியர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி அதில்பொதுமக்கள் தரும் சுய மதிப்பீட்டில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் மின்வாரிய ஊழியர்கள் ரிடிங் எடுப்பார்கள் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
சமீபகாலமாக தமிழ்நாடு அரசு மக்களுக்காக சில சலுகைகளை வெளியிட்டு வருகிறது அதாவது அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு பஸ் கட்டணம் இல்லை மற்றும் கொரோனா நிதியாக குடும்பத்திற்கு 2000 ரூபாய் கொடுத்து வந்தது.
தற்போது அதேபோல் மக்களின் சூழ்நிலையை புரிந்துகொண்டு தமிழ்நாடு அரசு மின்கட்டண முறையை எளிமை படுத்தி உள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் ஊரடங்கு அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.