சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஆஃபர் இல்லாத ஒரே தங்க நகைக்கடை, எண்ணற்ற டிசைன்களின் இருப்பிடம் – சரவணா ஸ்டோர்ஸ் எலைட்.!

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நிறுவனமாக விளங்கி வருவது தான் சரவணா ஸ்டோர்ஸ். இதன் நகை வியாபாரம் 1994-ம் ஆண்டு தொடங்கப்பட்டு அதிலிருந்து நிர்வகித்து வந்த டாக்டர் Y சிவ அருள் துரை அவர்கள் நிர்வாக விரிவாக்கத்தின் காரணமாக கடந்த 2003-ம் ஆண்டு சரவணா ஸ்டோர்ஸ் தங்கநகை மாளிகை என்ற பெயரில் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்றார்போல தரத்தை உயர்த்தினார்.

அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டில் வாடிக்கையாளர்களுக்கு மேலும் கூடுதல் வசதியை வழங்குவதற்காகவும், வாடிக்கையாளர்களின் ஷாப்பிங் அனுபவத்தை மேம்படுத்துவதற்காகவும் மீண்டும் சரவணா ஸ்டோர்ஸ் தங்கநகை மாளிகையின் தரம் உயர்த்தப்பட்டது. ஒவ்வொரு வகையான நகைகளுக்கும் தனித்தனி ஷோ ரூம்.  அதாவது, சரவணா ஸ்டோர்ஸ் தங்கநகை மாளிகை ( Saravana Stores Thanganagai Maligai ), சரவணா ஸ்டோர்ஸ் எலைட் கோல்ட் ( Saravana Stores Elite Gold )

saravana-stores-2
saravana-stores-2

சரவணா ஸ்டோர்ஸ் எலைட் டைமண்ட் ( Saravana Stores Elite Diamond ) என அனைத்திற்கும் மிக பிரம்மாண்டமாக முதல் ஷோரூமை சரவணா ஸ்டோர்ஸ் குழுமம் தான் வடிவமைத்தது. சரவணா ஸ்டோர்ஸ் எலைட்-ல் விற்பனை செய்யப்படும் நகைகள் ஹால்மார்க் முத்திரை பெற்ற தரம் நிறைந்த நகைகள்.

saravana-stores-2
saravana-stores-2

தாம்பரத்திலும் சரவணா ஸ்டோர்ஸ் எலைட் தங்கநகை மாளிகை என்ற பெயரில் மிகப்பெரிய கடை செயல்பட்டு வருகிறது. அதிகப்படியான டிசைன்களுடன் வடிவமைக்கப்பட்ட ஆபரணங்கள் மேலும் அதற்கேற்ற சேதாரங்களுடன் வைரம், தங்கம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை நியாயமான விலையில் நிறைந்த தரத்துடன் விற்பனை செய்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக தமிழகத்திலேயே, அவ்வளவு ஏன் இந்தியாவிலேயே வைரத்திற்கென மிகப்பெரிய தனி ஷோரூம் சரவணா ஸ்டோர்ஸ் எலைட் டைமண்ட் தவிர வேறு எங்கும் கிடையாது. அனைத்து தர மக்களும் வைரம் வாங்கும் அளவிற்கு குறைந்த விலையில் இருந்து வைர நகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தி நகரில் சரவணா ஸ்டோர்ஸ் தங்கநகை மாளிகை, சரவணா ஸ்டோர்ஸ் எலைட் கோல்ட், சரவணா ஸ்டோர்ஸ் எலைட் டைமண்ட்ஸ், என தனித்தனி ஷோரூம்களுடன் 1 லட்சத்துக்கும் அதிகமான சதுரடியில் பிரம்மாண்ட கடையாக சரவணா ஸ்டோர்ஸ் எலைட் செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் ஒரே நேரத்தில் 150-க்கும் அதிகமான கார் மற்றும் 300-க்கும் அதிகமான பைக் பார்க் செய்யும் வகையில் பார்க்கிங் வசதி உள்ளது. லிப்ட் வசதியும் உண்டு.

சரவணா ஸ்டோர்ஸ் எலைட்-ன் நிர்வாக இயக்குனராக ( MD ) டாக்டர் Y சிவ அருள் துரை MBBS அவர்கள் நிர்வகித்து வருகிறார். இவர் மருத்துவ படிப்பை முடித்திருந்தாலும் தன்னுடைய அப்பாவின் தொழில் மீது கொண்ட பற்றினாலும் ஆர்வத்தினாலும் தொடர்ந்து சரவணா ஸ்டோர்ஸ் எலைட்-ஐ வெற்றியின் பாதையில் நிர்வகித்துக் கொண்டிருக்கிறார். சரவணா ஸ்டோர்ஸ் எலைட் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய புகழையும், வரவேற்பையும், நற்பெயரையும் பெற்றிருப்பதற்கான காரணம் அவருடைய நேர்மையும், அயராத உழைப்பும் தான்.

எங்கும் கிடைக்காத அதிகப்படியான கலெக்சன்கள்.! நிறைந்த தரத்துடன் கூடிய வைரம், தங்கம் பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகள்.!! வெளிப்படையான சேதாரத்துடன் வைரம், தங்கம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகளை வாங்க சரவணா ஸ்டோர்ஸ் எலைட்-க்கு வாங்க..!!

மேலும் இந்த கடையின் கூடுதல் சேவையாக வீட்டில் இருந்தபடியேயும் நீங்கள் விருப்பப்பட்ட தங்க நகைகளை வீடியோ கால் மற்றும் ஆன்லைன் மூலமாகவும் வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு சேவையாற்ற நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என டாக்டர் Y சிவ அருள் துரை அவர்கள் கூறுகிறார்.

Trending News