உலகின் நம்பர் 1 பணக்காரரும், டுவிட்டர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் அதிபருமான எலான் மஸ்க் எப்போதும் சமூக வலைதளங்ளில் ஆக்டிவாக இருப்பவர். அவரைச் சுற்றிலும் உள்ள சர்ச்சைகளும், அவரைப் பற்றிய சர்ச்சைகளும் எப்போதும் ஓய்வதில்லை. அலைபோல் அது வந்துகொண்டேதான் இருக்கும்.
பல தொழிகள் செய்து, உலக மார்க்கெட்டில் தனக்கென தனியிடம் பிடித்து பல நூறு கோடி மக்களின் அபிமானத்தைப் பெற்று, தனது ஸ்பேக் எக்ஸ் ராக்கெட்டுகள் மூலம் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுக்கே சவால் விட்டு தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கி வரும் எலான் மஸ்க் புதிய காட்ஸ்லியான புதிய வீடு வாங்கி உலகின் கவனத்தை மேலும் ஈர்த்துள்ளார்.
அமெரிக்காவின் பிரபல பகுதியில் அவர் தனது 3 மனைவிகள், 11 குழந்தைகளுக்காக 35 மில்லியன் டாலர் மதிப்பிலான புதிய மற்றும் ஆடம்பரமான சொகுசு வீட்டை அவர் வாங்கியிருக்கிறார். இதுதான் அமெரிக்காவில் தற்போது ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது.
அமெரிக்காவின் முக்கியம பகுதியான டெக்சாஸ் மாகாணத்தில் அதி நவீன அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ள இந்தக் குடியிருப்பில் தன் குழந்தைகள் மற்றும் மனைவியுடன் வசிக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார். உலகின் டாப் பணக்காரர்களில் முதலிடத்தில் இருந்து வரும் எலான் மஸ்க், தான் நினைத்ததை நினைத்த நேரத்தில் வாங்க முடியும் நிலையில் இருந்தாலும் அவருக்கு எது தேவையோ அதை தேவையான நேரத்தில்தான் பெறுவார் என கூறப்படுகிறது.
295 கோடி மதிப்பிலான புதிய வீடு
அதன்படி, தற்போது வீடு வாங்கிய நிலையில் அதன் மொத்தப் பரப்பளவு 14, 400 ஆயிரம் சதுரடியாகும். இந்த வீட்டின் அருகே 6 பெட் ரூம்கள் கொண்ட குடியிருப்பை ஏற்கனவே வைத்திருக்கும் அவர், அங்கு தனது முன்னாள் மனைவிகள் இருவரும் வசிப்பதற்காக அதை ஒதுக்கியுள்ளதாகவும், தற்போது 35 மில்லிய டாலர் விலையில் அதாவது ரூ.295 கோடி மதிப்பில் வாங்கியுள்ள இப்புதிய வீட்டில் அவரது 11 குழந்தைகளுடன் அவரும் வசிப்பார் என கூறப்படுகிறது.
அதாவது, எலானுக்கு மொத்தம் 3மனைவிகள். இதில், முதல் மனைவி ஜஸ்டின் வில்சனுக்கு 5 குழந்தைகளும், 2வது மனைவி க்ரீம்ஸுக்கு 3 குழந்தைகளும், 3வது மனைவி ஷிவோன் ஷில்லிஸ்கு 3 குழந்தைகளும் உள்ளனர். இதில், முதல் 2 மனைவிகளிடம் இருந்து பிரிந்த எலான் மஸ்க் 3வது மனைவி ஷிவோனுடன் தற்போது வாழ்ந்து வருகிறார். ஷிவோன் ஷில்லிஸ் தற்போது எலான் மஸ்கின் நியூராலிங் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.
மேலும், எலான் மஸ்க் பல்வேறு தொழிலில் கவனம் செலுத்தி முதன்மை நிறுவனமாக அவற்றை வழி நடத்தி வந்தாலும் குடும்பத்திலும் தனி கவனம் செலுத்தி வருவது மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது. அதேசமயம் விரைவில் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிகார் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.