புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தண்ணீர் தேவாமிர்தமாக, ஒதுக்கிய உணவெல்லாம் வரமாக தெரிகிறது.. சர்வைவர் ஸ்ருஷ்டி டாங்கேவின் உணர்வுபூர்வமான பேச்சு

16 போட்டியாளர்களுடன் ஜீ தமிழில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி சர்வைவர். இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் எபிசோடிலேயே போட்டியாளர்கள், காடர்கள் அணி மற்றும் வேடர்கள் அணி என்று இரண்டு அணியினராக பிரிக்கப்பட்டனர். இவர்களுக்கு பல்வேறு டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. டாஸ்குகளில் வெற்றி பெறும் அணிக்கு பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

பரிசு என்றால் பணம் அல்ல அவர்களுக்கு தேவையான பொருட்களாக மசாலா பொருட்கள், நெருப்பு, உணவு சார்ந்த பொருட்கள் போன்ற பொருட்களை பரிசாக வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியிலிருந்து ஸ்ருஷ்டி டாங்கே மற்றும் இந்திரஜா இருவரும் தற்போது வரை எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

எனவே சர்வைவர் நிகழ்ச்சியிலிருந்து வீடு திரும்பிய ஸ்ருஷ்டி டாங்கே கேக் வெட்டி குடும்பத்துடன் கொண்டாடினார். அதன் பிறகு கண்ணாடியில் முகத்தைப் பார்த்த ஸ்ருஷ்டி டாங்கே, பழுதடைந்து கலரே மாறிவிட்டதாக அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியடைந்தார். பிறகு தற்போது சர்வைவர் நிகழ்ச்சியில் ஏற்பட்ட அனுபவத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

அதில், ‘சர்வைவர் நிகழ்ச்சிக்கு நான் விருப்பப்பட்டுதான் சென்றேன். அந்த நிகழ்ச்சி மிகவும் அட்வென்ச்சர் நிறைந்ததாகவும், ரிஸ்க் எடுக்கக்கூடிய நிகழ்ச்சியாகவே இருந்தது. இருப்பினும் என்னுடைய தைரியத்தை வளர்த்துக் கொள்வதற்கும் பங்கேற்றேன்.

SrushtiTange-cinemapettai
SrushtiTange-cinemapettai

நிஜமாகவே சர்வைவர் ஒரு மைண்ட் கில்லிங் கேம். அதிலிருந்து சீக்கிரம் வெளியே வந்தது நல்லதுதான். முன்பெல்லாம் ஒதுக்கிய பல உணவுப் பொருள்கள் இப்பொழுது எனக்கு வரமாக தெரிகிறது. அந்த அளவிற்கு என்னுடைய வாழ்க்கையை வேறு ஒரு கோணத்தில் சர்வைவர் பார்க்க வைத்துள்ளது.

அத்துடன் இந்த நிகழ்ச்சியில் எந்த ஒரு ஸ்கிரிப்ட் இல்லாமல் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்ற முதல் நாள் மிகவும் சிரமப்பட்டேன். முதல் மூன்று நாள் பழம் மட்டுமே சாப்பாடாகவும், சுத்தமான தண்ணீர் கூட கிடைக்காததால் உடம்பில் சில தடுப்புகள் வந்துவிட்டது. இன்றுவரை அது முழுமையாக சரியாகவில்லை. இவ்வாறு சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும்  பல சுவாரசியமான சம்பவங்களை ஸ்ருஷ்டி டாங்கே தொடர்ந்து ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

Trending News