ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

காப்பியடித்தே செட்டிலான அட்லீ.. கூடாரத்தை காலி செய்து இத்தனை கோடியில் சொகுசு வீடா.?

தமிழில் விஜய்யை வைத்து அதிக ஹிட் படங்களை கொடுத்த அட்லீ இப்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். அங்கு அவர் ஷாருக்கான், நயன்தாராவை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் பாலிவுட் திரையுலகில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாகவும் இது இருக்கிறது. இவ்வாறு ஜவான் படத்திற்கு சில ஹைப் இருந்தாலும் அட்லீ குறித்த நெகட்டிவ் விமர்சனங்களும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதாவது இப்படம் கமலின் நடிப்பில் வெளிவந்த ஒரு கைதியின் டைரி என்ற படத்தின் காப்பி என்ற ஒரு பேச்சும் இப்போது கிளம்பியுள்ளது.

Also read: நயன், விக்கி போல இல்ல.. ஷார்ட்டாக மகனுக்கு பெயர் வைத்த அட்லீ

ஏற்கனவே இவரின் படங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு பழைய திரைப்படத்தின் காப்பி என்பது பல சமயங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதனாலேயே அவரை பலரும் காப்பி இயக்குனர் என்று கலாய்த்து வந்தனர். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத இவர் இப்போது பாலிவுட் வரை சென்று விட்டார்.

மேலும் ஜவான் திரைப்படத்தை தொடர்ந்து மற்றொரு டாப் நடிகரின் திரைப்படத்தை இவர் இயக்குவதற்கும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். அதனாலேயே அட்லீ இப்போது தன்னுடைய கூடாரத்தை சென்னையில் இருந்து காலி செய்துவிட்டு மும்பை செல்லும் முடிவில் இருக்கிறாராம்.

Also read: கமல், விஜய் படங்களும் இப்படி தான் எதிர்ப்பு கிளம்பியது.. தி கேரளா ஸ்டோரி படத்துக்கு வக்காலத்து வாங்கும் பிரபலம்

அந்த வகையில் அவர் இப்போது பல கோடி மதிப்புள்ள ஒரு சொகுசு வீட்டை வாங்கிப் போட்டு இருக்கிறார். அதாவது மும்பையின் முக்கிய பகுதியில் இருக்கும் ஒரு சொகுசு அப்பார்ட்மெண்டில் இவர் 38 கோடி மதிப்புள்ள ஒரு வீட்டை வாங்கி இருக்கிறார். இதுதான் இப்போது பரபரப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது.

ஏற்கனவே சூர்யா தன் குடும்பத்தோடு மும்பையில் வசிப்பதற்காக ஆடம்பரமான ஒரு வீட்டை வாங்கி இருந்தார். அதை தொடர்ந்து அட்லியும் இப்போது இவ்வளவு பெரிய தொகைக்கு வீடு வாங்கியுள்ளார். அந்த வகையில் அவர் சொந்த சரக்கு இல்லாமல் காப்பி கதையை வைத்தே செட்டில் ஆகிவிட்டார் என்று பலரும் கலாய்த்து வருகின்றனர். இருப்பினும் மகன் வந்த நேரம் அவருக்கு நல்லது நடக்கிறது எனவும் சிலர் கூறி வருகின்றனர்.

Also read: ஹீரோ ஹீரோயினை விட அதிக பாராட்டு வாங்கிய 5 கதாபாத்திரங்கள்.. சூர்யாவை ஓரமாய் நிக்க வைத்த கேரக்டர்

Trending News