ராஜ்கிரன் சினிமா வாழ்க்கையையே திருப்பிப் போட்ட படம் என்றால் அது என் ராசாவின் மனசிலே. 20 வருடங்களுக்கு முன்பு வெளியான இப்படம் இன்று வரை பேசப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூப்பர் ஹிட் அடித்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது ராஜ்கிரண் கிடையாது. அப்ப வேற யார் என்பதை பார்ப்போம்.
கஸ்தூரிராஜா இயக்குனராக அறிமுகமான முதல் படத்திலேயே வெற்றி கண்டார். இப்படம் வெற்றி அடைவதற்கு முக்கிய காரணமே தொடை தெரிய வேஷ்டி கட்டுவது, எலும்பு கடிப்பது மற்றும் மீன் சாப்பிடுவது காட்சிதான்.
இளையராஜாவிற்கு உச்சம் தொட்ட பாடல்களில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு. ஆரம்பத்தில் இப்படத்தில் நடிப்பதற்கு பல நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
ஆனால் எந்த ஒரு நடிகரும் இப்படத்தில் நடிப்பதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் கஸ்தூரி ராஜா அன்றைய காலத்தில் முன்னணி நடிகர்களான விஜயகாந்த் மற்றும் சத்யராஜுடன் கேட்டுள்ளார்.
ஆனால் அப்போது விஜயகாந்த் தனது 100வது படமான கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்ததால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை மேலும் சத்யராஜ்யிடம் கேட்டுள்ளனர். அவரும் இரவு பூக்கள் என்ற படத்தில் பிசியாக நடித்ததால் இப்படத்திலும் அவரால் நடிக்க முடியவில்லை.
இதனால் மனமுடைந்து போன கஸ்தூரிராஜா என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் ராஜ்கிரன் நினைவுக்கு வந்துள்ளார். பின்பு ராஜ்கிரன்னிடம் படத்தின் கதையைக் கூறி சம்மதம் வாங்கிய இப்படம் உருவாகியுள்ளது.
இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த பிறகு விஜயகாந்த் மற்றும் சத்யராஜ் இப்படிப்பட்ட சூப்பர் ஹிட்டான படத்தை தவிர்த்து விட்டோமே என கவலைப்பட்டதாக அன்றைய காலத்தில் சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.