புதன்கிழமை, ஜனவரி 22, 2025

என் சுவாச காற்றே படத்தில் ‘ஜும்பலக்கா ஜும்பலக்கானு’ ஆட்டம் போட்டது யார் தெரியுமா? இப்ப மார்க்கெட்டே வேற லெவல்

தமிழ் சினிமாவில் என் சுவாச காற்றே  படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் தியா மிர்சா. அதன்பிறகு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஹிந்தியில் வெளியான Rehnaa Hai Terre Dil Mein என்ற படத்தின் மூலம்  பாலிவுட்டில் கால் பதித்தார்.

அதன் பிறகு தொடர்ந்து இவர் பாலிவுட்டிலேயே பல படங்களில் கெஸ்ட் ரோல் ஆகவும், ஒரு சில படங்களில்  முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இதுவரைக்கும் இவர் அழகு போட்டிக்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.

2000 ஆம் ஆண்டு  ஃபெமினா மிஸ் இந்தியா பட்டம் பெற்றார். மிஸ் பியூட்டிஃபுல் ஸ்மைல் மற்றும் மிஸ் க்ளோசப் ஸ்மைல் போன்ற சிரிப்பிற்கு மட்டுமே இரண்டு விருதுகளை பெற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் பாலிவுட்டில் நடித்த படங்களுக்கு பல விருதுகள் வாங்கியுள்ளார்.

dia mirza-vaibhav-rekhi-cinemapettai
dia mirza-vaibhav-rekhi-cinemapettai

தியா மிர்சா 2015ஆம் ஆண்டு சாக்கில் சங்கரா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சிறிது நாட்களிலேயே காதல் கசந்து விட 2019 ஆம் ஆண்டு  இருவரும் விவாகரத்து வாங்கி உள்ளனர்.

அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் கவனம் செலுத்தி வந்த  தியா மிர்சா தற்போது 46 வயது உடைய  வைபவ் ரேகி என்ற தொழிலதிபரை திருமணம் செய்ய உள்ளார். தற்போது இந்த தகவல் தான் சினிமா வட்டாரத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

திருமணத்திற்கு பிறகும் இவர் படங்களில் நடிப்பாரா என்பது தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் கூறி வருகின்றனர்.

Trending News