தமிழ் நாட்டில் புதிய அரசியல் தொடங்குவது என்பது இயல்பான விஷயம்தான். ஆனால் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கி அதன் முதல் மாநாட்டை நடத்தியபோது அனைத்துக் கட்சிகளும் அவரை உற்றுக் கவனித்தனர். அந்த மா நாட்டில் விஜய் பேசியபோது, தமிழ்த் தேசியமும், திராவிடமும் இரண்டு கண்கள், ஆட்சியில் பங்கு எனப் பேசியதுதான் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு – ஆதவ் அர்ஜூனா
தவெக தலைவர் விஜயின் ஆட்சியில் பங்கு தொடர்பான கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆதரவு தெரிவித்தார். ஏற்கனவே ஆதவ் அர்ஜூனா ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என குரல் எழுப்பி வருகிறார்.
இதனால் திமுக, விசிக இடையே சமீப காலமாக விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், விசிக துணைப்பொதுச்செயலாள ஆதவ் அர்ஜூனாவின் கருத்துக்கு திமுக துணைப்பொதுச்செயலாளார் ஆ.ராசா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இவரது கருத்துக்கு உட்கட்சிக்குள்ளேயே சலசலப்பு ஏற்பட்டது.
தன் கருத்தில் உறுதியாக இருப்பதாக அர்ஜூனா சொன்ன நிலையில் இதுகுறித்து திருமாவளவன் திமுக, விசிக இடையே எந்த சிக்கலும் இல்லை, மோதலும் இல்லைல் அர்ஜூனா மீது கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என விளக்கம் அளித்தார்.
கோவையைச் சேர்ந்த லாட்டரி சீட்டு விற்பனை அதிபர் மார்ட்டினின் மருமகனான ஆதவ் அர்ஜூனாவுக்கு கட்சியில் செல்வாக்கு நிலவுகிறது. இந்த நிலையில், வரும் டிசம்பர் 6 ஆம் தேதி எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழா நடக்கிறது. இதில், விஜய், திருமாவளவன், முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பதாக கூறப்படுகிறது.
புத்தக வெளீயீட்டு விழாவில் விஜய் பங்கேற்பாரா
இப்புத்தகத்தை வெளியிடுவது ஆதவ் அர்ஜூனாவின் வாய்ஸ் ஆப் காமன்ஸ் என்ற தேர்தல் வியூக நிறுவனம் என்ற நிலையில், அவர்தான் விஜய்க்கு இவ்விழாவி பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் திருமாவளவன் விஜய் கட்சியை சீண்டிய நிலையில், முதல்வரும் புதிய கட்சி என்று குறிப்பிட்டு தாக்கிப் பேசியிருந்தார் ஒரு நிகழ்ச்சியில், இதனால் கொள்கை ரீதியாக அனைவரும் ஏற்றுக் கொண்ட தலைவர் அம்பேத்கர் பற்றிய புத்தக வெளீயீட்டு விழாவாக இருந்தாலும் திமுக, விசிகவில் ஆதவ் அர்ஜூனாவை தவிர விஜய்க்கு பெரும் எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது. இதனால் அவ்விழாவில் விஜய் பங்கேற்பாரா? என கேள்வி எழுந்துள்ளது.
ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED சோதனை
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய்க்கும் அவரது கொள்கைக்கும் ஆதரவு தெரிவித்த விசிக துணைப் பொ.செ., ஆதவ் அர்ஜூனாவின் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடந்த நிலையில் இன்று அமலாக்கத்துறையினர் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.