Vishal : விஷாலுக்கு தற்போது 47 வயதாகியும் தற்போது வரை சிங்கிளாகவே சுற்றி வருகிறார். நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகுதான் தனக்கு திருமணம் என்று கூறியிருந்தார். இந்த சூழலில் விஷாலுடன் பூஜை, மார்க் ஆண்டனி போன்ற படங்களில் நடித்தவர் தான் அபிநயா.
இதற்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்த படம் நாடோடிகள். காது கேட்காமல், வாய் பேச முடியாமல் இருக்கும் இவர் தன்னுடைய திறமையால் 15 வருடமாக சினிமாவில் நிலைத்து நிற்கிறார். தற்போதும் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த சூழலில் விஷால் மற்றும் அபிநயா இருவரும் காதலிப்பதாகவும், இவர்களுக்கு விரைவில் திருமணம் என்றும் செய்திகள் வெளியானது. இது குறித்து அபிநயா பேசுகையில் இது முற்றிலும் வதந்தியே என்று கூறுகிறார்.
அபிநயா வெளியிட்ட நிச்சயதார்த்த புகைப்படம்

சமீபத்தில் மதகஜராஜா பிரமோஷனில் விஷால் கலந்து கொண்ட போது அவரது கை நடுங்கியது. அன்று அவருக்கு அதிகமாக ஜுரம் இருந்ததால் கை நடுங்கியது என்று அவரே கூறியிருந்தார். அப்போது அபிநயா ஃபோன் செய்து விஷாலின் உடல்நலம் விசாரித்தாராம்.
அபிநயா இன்று தனது இன்ஸ்டா பக்கத்தில் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக புகைப்படம் ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் இருவரும் கோயில் மணியை தொடுவது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது.
இதில் மாப்பிள்ளை முகம் தெரியாததால் யாராக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. ஆனால் விஷால் இல்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இதன் மூலம் தற்போது வரை வந்து கொண்டிருக்கும் சர்ச்சைக்கு அபிநயா முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.