தமிழில் நடிக்க வந்த வேறு மாநிலத்தைச் சேர்ந்த நடிகைகள் தங்களது முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களை கவர்ந்து, அத்திரைப்படத்தை ஹாட்ரிக் வெற்றியையும் பெற்றுக் கொடுப்பார். அப்படிப்பட்ட நடிகைகள் மீண்டும் வந்த பாதைக்கே திரும்பி சென்று தமிழ் சினிமா பக்கம் தலை வைத்தே படுக்காத 5 நடிகைகளின் லிஸ்டை தற்போது பார்க்கலாம். இதில் முக்கியமாக கமலஹாசனால் வாய்ப்பையே பறிகொடுத்த ஹிந்தி நடிகையின் பெயரும் உள்ளது.
நமீதா பிரமோத் : மலையாள நடிகையான நமீதா பிரமோத், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நிமிர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார். பார்க்க லட்சணமாக இருக்கும் இவர், நிமிர் படம் வெளியானபோது பல இளைஞர்களின் வாட்ஸ்அப் டி.பி யில் தஞ்சம் அடைந்தார். அந்த அளவிற்கு இவரை ரசிகர்கள் வரவேற்த்த நிலையில் ,மீண்டும் மலையாளத்திற்கே சென்று பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாளவிகா நாயர்: இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் வெளியான குக்கூ படத்தில் கதாநாயகியாக நடித்த மாளவிகா நாயர், மலையாள திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்தவர். குக்கூ திரைப்படத்தில் பார்வையற்றவரான இவரின் நடிப்பு, இன்றுவரை ரசிகர்களுக்கு பிடித்தம். ஆனால் குக்கூ திரைப்படத்திற்குப் பின் தமிழில் எந்த படத்திலும் கமிட்டாகாமல் தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்வதி: இயக்குனர் சசி இயக்கிய பூ திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமான பார்வதி, அப்படம் வெற்றி பெற்ற பின்பும் அவருக்கு தமிழில் சரியான மார்க்கெட் இல்லாததால் மலையாளத்தில் கால் பதித்து பல திரைப்படங்களை கொடுத்தார். பின்பு தனுஷின் நடிப்பில் வெளியான மரியான் திரைப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்த பார்வதிக்கு ரசிகர்கள் பெருமளவில் வரவேற்கவில்லை. இதனிடையே மலையாளத்திலேயே செட்டிலாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்யுக்தா வர்மா: மலையாள நடிகையான இவர்,2002ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார்,நெப்போலியன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான தென்காசிப்பட்டிணம் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இத்திரைப்படம் சூப்பர்,டூப்பர் ஹிட்டான நிலையில் சம்யுக்தா வர்மா தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் அடிப்பார் என பலரும் எதிர்பார்த்தனர்.ஆனால் இத்திரைப்படத்திற்குப் பின்பு திருமணம் செய்துகொண்டு எந்த படங்களிலும் தற்போது வரை நடிக்காமல் குடும்பத்துடன் செட்டிலாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊர்மிளா மண்டோத்கர்: உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தில் சப்னா என்ற கதாபாத்திரத்தில் ஊர்மிளா மண்டோத்கர் நடித்திருந்தார். இந்தி நடிகையான இவர்,இப்படத்திற்கு பின்பு தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என பலரும் எதிர்பார்த்தனர்.ஆனால் கமலஹானுசக்கு பயந்தே, அதன்பின் தமிழ் சினிமா பக்கமே வராமல் அப்படியே ஹிந்தியில் செட்டில் ஆகி உள்ளார்.