2025 வீழ்ச்சி மற்றும் எழுச்சி.. தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்த படங்கள்
2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு உற்சாகமும், சில ஆச்சரியங்களும் நிறைந்த ஆண்டாக இருந்தது.
2025 ஆம் ஆண்டில், தமிழ் சினிமா உலகளவில் அதிக வசூல் சாதனை படைத்த பல பிரம்மாண்ட படங்களைக் கண்
ரஜினிகாந்த், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான 'கூலி' திரைப்படம், ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. இப்படம் உலகளவில் ₹516 கோடிக்கு மேல் வசூலித்து, இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்தது.
அஜித் குமார் நடிப்பில் வெளியான இப்படம், உலகளவில் சுமார் ₹248 கோடி வசூலித்து, பாக்ஸ் ஆபிஸில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இளைஞர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த, பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டிராகன்' திரைப்படம் ₹150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, லாபத்தில் முன்னணி வகித்த படங்களில் ஒன்றாக அமைந்தது.
பெரும் பொருட்செலவில் உருவாகும் பெரிய நடிகர்களின் படங்கள் ஒருபுறம் இருக்க, சில எதிர்பாராத படங்களும் இந்த ஆண்டு ரசிகர்களின் மனதை வென்றன.
சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம் நடித்து 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த மத கஜ ராஜா படம், பொங்கலை முன்னிட்டு வெளியாகி சர்ப்ரைஸ் ஹிட் அடித்தது. இப்படம் ₹50 கோடிக்கும் மேல் வசூலித்தது, ஒரு தாமதமான படத்திற்கு கிடைத்த அபூர்வ வெற்றியாகும்.
சசிகுமார் நடித்த குறைந்த பட்ஜெட் படமான இது, சுமார் ₹8-10 கோடி பட்ஜெட்டில் உருவாகி, ₹90 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அனைத்து தரப்பினரையும் ஆச்சரியப்படுத்தியது. மணிகண்டன் இயக்கத்தில் வெளியான குடும்பஸ்தன் படம், விமர்சகர்கள் மத்தியிலும், குடும்பப் பார்வையாளர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்று, கணிசமான வெற்றியைப் பதிவு செய்தது.
பலத்த எதிர்பார்ப்புடன் வெளியாகி, கலவையான விமர்சனங்கள் அல்லது வணிக ரீதியான தோல்விகளைச் சந்தித்த சில முக்கியப் படங்களும் இந்த ஆண்டில் இருந்தன. கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் வெளியான தக் லைஃப் படம், கடுமையான விமர்சனங்களைப் பெற்றதுடன், வணிக ரீதியாகவும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
அஜித் குமாரின் விடாமுயற்சி படம், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானாலும், விமர்சன ரீதியாகக் கலவையான முடிவுகளைப் பெற்று, வசூலிலும் எதிர்பார்த்த சாதனையை எட்டவில்லை.
