தெலுங்கிலும் தமிழிலும் பல படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் தான் மந்த்ரா. இவரின் பல படங்கள் வெற்றி பெற்ற நிலையில் தன் படத்திற்கு இவர் தான் ஹீரோயின் ஆக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஹீரோக்களும் உண்டு.
இது போன்ற வாய்ப்புகளை சினிமாவில் தக்கவைத்துக் கொண்ட மந்த்ராவிற்கு அடுத்தடுத்து பல படங்கள் கிடைத்தது. அவ்வாறு இவரால் வசிகரிக்கப்பட்ட நான்கு ஹீரோக்களை பற்றி இங்கு பார்க்கலாம்.
அருண் விஜய்: 1996ல் என் பாண்டியன் இயக்கத்தில் அருண் விஜய், மந்திரா மற்றும் பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளிவந்த படம் தான் பிரியம். இப்படத்தில் இவர்கள் இருவரும் இடம் பெறும் காட்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்தது. இப்படத்தின் பெயருக்கு ஏற்ப இவர்கள் இடையே காதல் மலர ஆரம்பித்து விட்டது. அதன்பின் தன் தந்தையின் எதிர்ப்பால் காதல் தோல்வியில் விழுந்தார் அருண் விஜய்.
விஜய்:1997ல் விஜய், சுவலட்சுமி மற்றும் மந்த்ரா ஆகியோர் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த படம் தான் லவ் டுடே. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக வருவார் சுவலட்சுமி. மேலும் விஜய்யின் தோழியாக மந்த்ரா இடம் பெற்றிருப்பார். இவர் மீது கொண்ட கிரஷ்ஷால் இப்படத்தில் இவரை இரண்டாவது ஹீரோயினாக வைக்குமாறு அடம் பிடித்தாராம் விஜய்.
பிரபு: 1997ல் ரவிவர்மாவின் இயக்கத்தில் பிரபு மற்றும் மந்த்ரா காம்பினேஷனில் வெளியான படம் தான் தேடினேன் வந்தது. அவரின் அழகில் மயங்கிய பிரபு தனக்கு ஜோடியாக இப்படத்தில் மந்த்ரா நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம். இப்படம் நகைச்சுவை படமாக இருப்பின் அதிலும் தன் நடிப்பாற்றலை வெளிக்காட்டி இருப்பார் மந்த்ரா.
கார்த்திக்: 2000ல் சுந்தர் சி இயக்கத்தில் வந்த இப்படம் இவருக்கு நல்ல வெற்றியை பெற்று தந்தது. இப்படத்தில் கார்த்திக், மந்த்ரா மற்றும் திவ்யா உன்னி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். தான் நடிக்கும் இப்படத்தில் மந்த்ராவை நடிக்க வைக்குமாறு இயக்குனரிடம் கேட்டுக் கொண்டாராம் கார்த்திக். இதைத்தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காமல் மற்ற கதாபாத்திரத்தையும் ஏற்று தன் நடிப்பினை வெளிக்காட்டி வருகிறார் மந்த்ரா.