1. Home
  2. எவர்கிரீன்

4 முறை சிவாஜியை வென்ற ரஜினிகாந்த்.. இன்றுவரை மாஸ் காட்டும் பில்லா

4 முறை சிவாஜியை வென்ற ரஜினிகாந்த்.. இன்றுவரை மாஸ் காட்டும் பில்லா
ஒரே நேரத்தில் மோதிக்கொண்ட ரஜினி மற்றும் சிவாஜியின் நான்கு படங்கள்

Sivaji - Rajini: என்னதான் டாப் ஹீரோக்கள் ஜாம்பவான்கள் ஆக இருந்தாலும், ஒரு சில நேரங்களில் இளம் ஹீரோக்கள் அவர்களை ஆட்டம் காண வைத்துவிடுவது உண்டு. அப்படித்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. யானைக்கும் அடிசறுக்கும் என்பது போல், சிவாஜியின் படங்கள் நான்கு முறை ரஜினி படங்களுடன் மோதி தோற்று இருக்கிறது.

சிவாஜியை வென்ற ரஜினியின் படங்கள்

ரிஷி மூலம்- பில்லா: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் கே ஆர் விஜயா நடிப்பில் நல்ல குடும்ப திரைப்படமாக வெளியானது ரிஷி மூலம். அதே நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு நீண்ட நாள் கழித்து கம்பேக்காக அமைந்த படம் பில்லா. தமிழில் நீண்ட வருடங்களுக்குப் பின் வெளியான வித்தியாசமான கேங்ஸ்டர் படம் என்பதால் இது மிகப் பெரிய வெற்றியை பார்த்தது. இந்த படத்தை ஒப்பிடும் பொழுது ரிஷிமூலம் டவுன் ஆகிவிட்டது. கல்தூண்-தில்லு முல்லு: நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் மற்றும் கே ஆர் விஜயா இணைந்து நடித்த படம் கல்தூண். ஊரில் பெரிய மனுஷன் ஆக இருக்கும் பரமேஸ்வர கவுண்டர் மற்றும் அவருடைய குடும்பத்தை சுற்றி நடக்கும் கதை. இந்த படம் ரிலீஸ் ஆன சமயத்தில் ரஜினியின் முழு நீள நகைச்சுவை படமான தில்லுமுல்லு ரிலீஸ் ஆனது. இதில் வசூல் ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் தில்லுமுல்லு வெற்றி பெற்றது. விஸ்வரூபம்-பொல்லாதவன்: இயக்குனர் திரிலோக சந்தர் இயக்கத்தில் சிவாஜி மற்றும் ஸ்ரீதேவி இணைந்து நடித்த படம் விஸ்வரூபம். இந்த படம் ரிலீஸ் ஆன சமயத்தை தான் ரஜினியின் மாஸ் ஹிட் படமான பொல்லாதவன் ரிலீஸ் ஆனது. இரண்டு படங்களுமே ஒன்றுக்கொன்று சளைக்காமல் போட்டியிட்டு 100 நாட்கள் திரை கண்டு வெற்றி அடைந்தது. இருந்தாலும் மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட படம் என்றால் பொல்லாதவன் தான். பட்டாக்கத்தி பைரவன் - அன்னை ஒரு ஆலயம்: சிவாஜி கணேசன், ஜெய் கணேஷ், ஜெயசுதா, ஸ்ரீதேவி ஆகியோர் இயக்கத்தில் வெளியான படம் பட்டாக்கத்தி பைரவன். அதே ஆண்டில் ரஜினி நடித்த அன்னை ஓர் ஆலயம் படம் ரிலீஸ் ஆனது. இதில் பட்டாகத்தி பைரவன் தோல்வி படம் என அப்போதைய மீடியாக்கள் பல எழுதி இருக்கின்றன. இதை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது அந்த வருடத்தில் அன்னை ஓர் ஆலயம் படம் வெற்றி பெற்றது. அதிக செல்வாக்கு பெற்றிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அப்போது வளர்ந்து வந்த ஹீரோ ரஜினி இடம் நான்கு முறை தோற்று இருக்கிறார். இருந்தாலும் இவர்கள் இருவருக்குள்ளும் நல்ல உறவு இருந்தது. பணக்காரன் மற்றும் படையப்பா போன்ற படங்களில் இவர்கள் இணைந்து நடித்த காட்சிகள் இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.
Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.