இருக்குற இடமே தெரியாமல் போன 80ஸ் ஹீரோக்கள்.. ரஜினி அளவுக்கு வந்திருக்க வேண்டிய நடிகர்
ரசிகர்கள் அதிகம் ரசித்த இந்த 5 80ஸ் ஹீரோக்கள் இருக்கும் இடம் தெரியாமல் தற்போது இருக்கிறார்கள்.
Rajinikanth - 80s Heroes: சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி தன்னை மாற்றிக் கொள்பவர்களால் தான் சினிமாவில் நீடிக்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை. டாப் ஹீரோக்களாக இருந்த 80ஸ் மற்றும் 90ஸ் நடிகர்கள் இப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், நெகட்டிவ் கதாபாத்திரங்களிலும் கலக்கி வருகிறார்கள். அதில் ஒரு சில நடிகர்களே எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரியாத அளவிற்கு காணாமல் போய்விட்டார்கள். ரசிகர்கள் அதிகம் ரசித்த இந்த 5 80ஸ் ஹீரோக்கள் இருக்கும் இடம் தெரியாமல் தற்போது இருக்கிறார்கள். சுதாகர்: சுருள் முடி, வசீகரமான புன்னகை என 80ஸ் காலத்தில் பெண் ரசிகைகள் அதிகம் கொண்டாடிய ஹீரோ தான் சுதாகர். கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்று நிறைய ஹிட் படங்களை கொடுத்ததோடு, அந்த காலத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இருவருக்கும் பயங்கர போட்டியாக இருந்தார். ஒரு கட்டத்தில் சுதாகர் படங்களோடு ரிலீஸ் ஆன ரஜினி படங்களே தோல்வி அடைந்தது. அப்படி நடித்துக் கொண்டிருந்த இவர் குடிப்பழக்கத்தால் தற்போது எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாத அளவிற்கு போய்விட்டார். திலீப்: நடிகர் திலீப் தமிழ் சினிமா கொண்டாட தவறிய ஒரு கலைஞன் என்று கூட சொல்லலாம். வித்தியாசமான தன்னுடைய நடிப்பின் மூலம், வசன உச்சரிப்பின் மூலம் ரசிகர்களிடையே நல்ல கவனத்தைப் பெற்றார். வறுமையின் சிவப்பு படத்தில் கமலுக்கு நண்பனாக நடித்திருப்பார். அதேபோன்று சம்சாரம் இது மின்சாரம் படத்தில் விசுவின் மருமகனாகவும் நடித்திருப்பார். அதன் பின்னர் இவர் தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார். கங்கா: எண்பதுகளில் காலகட்டத்தில் குணச்சித்திரம் மற்றும் நெகட்டிவ் கேரக்டர்களில் கலக்கியவர் தான் நடிகர் கங்கா. இயக்குனர் மற்றும் நடிகர் டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான உயிருள்ளவரை உஷா படத்தில் முதலில் நடித்த இவர், அதன்பின்னர் தொடர்ந்து அவருடைய படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். நல்ல நடிப்பு திறமை இருந்தும் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார். சிவா: எண்பதுகளின் காலகட்டத்தில் முன்னணி ஹீரோக்களில் லிஸ்டில் இருந்தவர் தான் நடிகர் சிவா. நடிகை மோகினி உடன் இவர் நடித்த ஈரமான ரோஜாவே படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தில் வரும் வா வா அன்பே பூஜை உண்டு, அதோ மேக ஊர்வலம் போன்ற பாடல்கள் இன்றுவரை பேவரைட் ஒன்றாக இருக்கிறது. சிவா ஒரு காலகட்டத்திற்கு மேல் படங்களில் நடிக்கவில்லை. நாகேஷ்: தமிழ் சினிமா இருக்கும் வரை நடிகர் நாகேஷின் பெயர் நிலைத்து நிற்கும். அப்படி சினிமாவை ஆண்டு வந்த நாகேஷின் மகன் ஆனந்த் பாபுவால் ஒரு நடிகராக நிலைத்து நிற்க முடியவில்லை. நல்ல, நல்ல படங்கள் ஹிட் கொடுத்தும் இவர் ஜொலிக்க முடியாமல் போய்விட்டார். அதற்கு இவருடைய குடிப்பழக்கம் தான் முதல் காரணம்.
