நம்ம சினிமாவில் வெற்றியை ருசிக்க போராடும் அக்கட தேசத்து 5 நடிகர்கள்
Five Telugu Actors: தற்போது கோலிவுட் முன்னணி நடிகர்கள் ஒவ்வொருவரும் வரிசையாக தெலுங்கில் நடித்துக் கொண்டு வருகிறார்கள். அதே போல் அக்கட தேசத்து நடிகர்களும் நம்முடைய தமிழ் சினிமாவின் வெற்றியை ருசிக்க போராடிக் வருகிறார்கள். அதற்காக பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரை கண் கொத்தி பாம்பாக வட்டமிட்டு வருகிறார்கள்.
பிரபாஸ்: தெலுங்கு நடிகரான பிரபாஸ், கோலிவுட்டிற்கு பாகுபலி படத்தின் மூலம் என்டரி கொடுத்து அனைத்து ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்து விட்டார். இதைத்தொடர்ந்து இதிகாச படங்களில் கவனம் செலுத்தி நடித்து, தொடர் தோல்விகளை மட்டுமே பார்த்து வருகிறார். அப்படிப்பட்ட இவர் தற்போது கையில் கிட்டத்தட்ட ஐந்து படங்களை வைத்துக்கொண்டு சுற்றி வருகிறார்கள். ஆனாலும் தமிழில் ஏதாவது ஒரு படத்தில் நடித்து அதன் மூலம் விட்டதை பிடித்து விடலாம் என்று இயக்குனர் சங்கருக்கு வலைவீசி வருகிறார்.
ராம் சரண்: தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் ராம்சரண் தமிழில் மஹதீரா என்ற படத்தின் மூலம் பிரபலமாகிவிட்டார். இதனைத் தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படத்திலும் நடித்து அனைவருடைய வரவேற்பையும் பெற்று விட்டார். தற்போது பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் திரையரங்குகளில் வர இருக்கிறது. இதன் மூலம் தமிழில் கொடி கட்டி பறந்து விட வேண்டும் என்று பிளான் பண்ணி களத்தில் இறங்கி விட்டார்.
நானி: தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நானி, தற்போது கோலிவுட்டிலும் இவருடைய முத்திரையை பதிப்பதற்கு படாத பாடுபட்டு வருகிறார். அதாவது தற்போது தெலுங்கு நடிகர்கள் அனைவரும் தமிழில் நடிப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். அந்த வகையில் தானும் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசையில் பல இயக்குனர்களிடம் பேச்சுவார்த்தையுடன் ஈடுபட்டு வருகிறார்.
நாக சைதன்யா: எல்லா தெலுங்கு நடிகர்களும் தமிழில் எப்படியாவது நடித்து பேமஸ் ஆகி விடுகிறார்கள். அதனால் இவரும் தமிழில் நடிக்க வேண்டும் என்று ரொம்பவே ஆர்வமாக இருந்தார். அந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாமல் சொதப்பிவிட்டது. இதனால் இயக்குனர் ஷங்கரை வைத்து எப்படியாவது தமிழில் வெற்றியை கொடுக்க வேண்டும் என்று போராடி வருகிறார்.
ஜூனியர் என்டிஆர்: தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வந்தவர், ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் எல்லா பக்கமும் ஃபேமஸ் ஆகிவிட்டார். அடுத்ததாக தேவாரா மற்றும் வார் என்ற ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார். தற்போது இவர் ஃபேமஸ் ஆனதால் இதை தக்க வைத்துக் கொள்வதற்காக, தமிழிலும் ஒரு படத்தில் நடித்து விட்டால் இன்னும் பிரபலமாகிவிடலாம் என்பதற்காக பிரம்மாண்ட இயக்குனரை கண் கொத்தி பாம்பாக வட்டமிட்டு வருகிறார்.
