ஒரே வயது நடிகையை அம்மாவாக நடிக்க வைத்த 5 நடிகர்கள்
Actor Rajinikanth: எவ்வளவோ விஷயங்கள் நாம் சினிமாவில் பார்த்திருந்தாலும் சில விஷயங்கள் எப்படி முடியும் என்ற ஆச்சரியப்படும் அளவிற்கு நடந்திருக்கிறது. அப்படித்தான் ஒரே வயதில் இருப்பவர்கள் எப்படி அம்மா மகனாக நடிக்க முடியும் என்று ஆச்சரியம் ஏற்படுத்தும் அளவிற்கு சில நடிகர்கள் ஒரே வயதில் நடிகையை தேர்வு செய்து அவர்களுக்கு மகனாக நடித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட படங்களையும் நடிகர்களையும் பற்றி பார்க்கலாம்.
நந்தா: இயக்குனர் பாலா இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு நந்தா திரைப்படம் வெளிவந்தது. இதில் சூர்யா, லைலா, சரவணன், ராஜஸ்ரீ மற்றும் கருணாஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சூர்யாவின் அம்மாவாக ராஜஸ்ரீ நடிகை நடித்திருக்கிறார். இவர் கருத்தம்மாவின் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் பல படங்களில் நடித்த பிறகு சூர்யாவின் அம்மா கேரக்டருக்கு நடித்தார். அப்பொழுது இவருடைய வயது 24 ஆனால் சூர்யாவின் வயது 26. கம்மியான வயது நடிகையை அம்மாவாக ஆக்கிக் கொண்டார் சூர்யா.
மைக்கேல் மதன காமராஜன்: சங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு மைக்கேல் மதன காமராஜன் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல், கிரேசி மோகன், ஊர்வசி, ரூபிணி, குஷ்பு மற்றும் ஜெயபாரதி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதில் கமலஹாசனின் அம்மாவாக ஜெயபாரதி நடித்திருக்கிறார். இவர் மலையாள திரைப்படங்களில் சிறந்த நடிகையாக பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். இப்படத்தில் கமலுக்கு அம்மாவாக நடிக்கும் போது இவருடைய வயது 36. ஆனால் அப்பொழுது கமலுக்கும் ஒரே வயது 36 தான். எப்படிடா அம்மா பையனுக்கு ஒரே வயது என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
படையப்பா: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு படையப்பா திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா மற்றும் லட்சுமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ரஜினியின் அம்மாவாக நடிகை லட்சுமி நடித்திருப்பார். ஆனால் இவர்கள் ஏற்கனவே ஜோடியாகவும் பல படங்களில் நடித்திருக்கிறார்கள். பின்னர் இந்த படத்தில் ரஜினியின் அம்மாவாக நடிக்கும் போது இவருடைய வயது 47 ஆனால் ரஜினியின் வயது 49. இந்த மாதிரி விஷயம் எல்லாம் படத்தில் மட்டும் தான் சாத்தியமாகும்.
கத்தி: ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு கத்தி திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், சமந்தா, நிதின் முகேஷ், சதீஷ் மற்றும் ரமா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜய், கதிர் மற்றும் ஜீவானந்தம் என்ற இரண்டு கேரக்டரில் நடித்திருப்பார். அதில் ஜீவாவின் அம்மாவாக ரமா என்ற நடிகை நடித்திருப்பார். இப்படத்தில் நடிக்கும் போது விஜய் மற்றும் அம்மாவாக நடித்த ரமா அவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயசு தான். ஆனாலும் பார்ப்பதற்கு அம்மா கேரக்டருக்கு பொருந்தக் கூடியதாக நடித்திருப்பார்.
சேதுபதி ஐபிஎஸ்: பி வாசு இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு சேதுபதி ஐபிஎஸ் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த், மீனா, எம் என் நம்பியார், ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜயகாந்துக்கு அம்மாவாக ஸ்ரீ வித்யா நடித்திருக்கிறார். அப்பொழுது ஸ்ரீவித்யா வயது 41 விஜயகாந்த் வயது 42 ஆனாலும் அம்மாவாக நடித்திருக்கிறார்.
