மார்க்கெட் இருக்கும் போது காணாமல் போன 5 நடிகைகள்.. தொலைந்தே போன செல்வராகவன் ஹீரோயின்

புகழின் உச்சத்தில் இருந்தபோது காணாமல் போன 5 நடிகைகள் .
சினிமாவில் இருக்கும் ஹீரோயின்களுக்கு எந்த அளவிற்கு அழகும் திறமையும் இருக்கிறதோ, அதே அளவிற்கு லக்கும் இருந்தால் தான் நிலைத்து நிற்க முடியும். அப்படி குறுகிய காலத்திலேயே மார்க்கெட்டை தட்டி தூக்கிய 5 நடிகைகள் இப்போது இருக்கிற இடமே தெரியாமல் காணாமல் போய்விட்டனர். அசின்: எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி அதன் பின் கஜினி, வரலாறு, போக்கிரி, வேல், தசாவதாரம் போன்ற படங்களில் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு மார்க்கெட்டை தட்டி தூக்கியவர் தான் அசின். இவர் ஹவுஸ்புல் 2 படத்தில் நடித்த போது அக்ஷய் குமாரின் நண்பரும், மைக்ரோ மேக்ஸ் நிறுவனருமான ராகுல் சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். ரித்திகா சிங்: இறுதிச்சுற்று படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் நடிகை ரித்திகாவின் கதவை தட்டியது. அந்த வரிசையில் விஜய் சேதுபதி உடன் இணைந்து ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து சிவலிங்கா, அசோக் செல்வனுடன் ஓ மை கடவுளே படங்களிலும் வரிசையாக நடித்த கலக்கி கொண்டிருந்தார். அதன்பின் மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் கிங் ஆப் கோதா படத்தில் ஐட்டம் பாடலுக்கும் நடனமாடி மலையாளத்திலும் என்ட்ரி கொடுத்தார். இப்படி மார்க்கெட் உச்சத்தில் இருந்த ரித்திகா சிங், இப்போது ஆள் அட்ரஸ் தெரியாமல் காணாமல் போய்விட்டார். மஹிமா நம்பியார்: சாட்டை படத்தில் பள்ளி மாணவியாக தோன்றி இளசுகளை கவர்ந்த மலையாள நடிகை மஹிமா நம்பியார், அதன் பின் குற்றம் 23, அகத்திணை, மகாமுனி உள்ளிட்ட படங்களிலும் மலையாளத்திலும் ஒரு ரவுண்டு கட்டினார். சமீபத்தில் இவர் நடித்த சந்திரமுகி 2 படம் படு தோல்வி அடைந்தது. இவர் எந்த அளவிற்கு வேகமாக வளர்ந்தாரோ, அதே அளவிற்கு வேகமாக சென்றுவிட்டார். இப்போது அவர் என்ன பண்ணுகிறார், என்ன படத்தில் நடிக்கிறார் என்பது கூட தெரியவில்லை.
