இறக்கும் வரை எம்ஜிஆர் கூடவே இருந்த 5 பாடிகார்ட்ஸ்.. கடைசி வரை கட்டிக் காப்பாற்றிய ரகசிய புகைப்படம்

நடிகரும், சிறந்த அரசியல் தலைவருமாக இருந்த எம்ஜிஆருக்கு இப்போதும் மக்கள் மனதில் ஒரு தனி இடம் இருக்கிறது. அந்த கால சினிமாவை ஆட்சி செய்த அவருடைய புகழை போற்றும் வகையில் எத்தனையோ திரைப்படங்கள் வெளிவந்து அவரை புகழின் உச்சத்துக்கே கொண்டு சென்றது. அப்போதெல்லாம் அவருக்கு பாதுகாப்புமாய் நம்பிக்கையுமாய் இருந்த 5 மெய் காப்பாளர்கள் உடன் இருந்திருக்கின்றனர். அதிலும் ஒருவர் கடைசி வரை ரகசியத்தை கட்டி காப்பாற்றி இருக்கிறார்.

K.P. ராமகிருஷ்ணன்: இவர் உருவ அமைப்பிலும் கெட்டப்பிலும் அப்படியே எம்ஜிஆர் போலவே இருப்பார். இதனால் எம்ஜிஆர் நடிக்கும் இரட்டை வேட படங்களில் டூப் போட்டுள்ளார். இந்த ரகசியம் பல வருடங்களாக யாருக்கும் தெரியாது. இப்போது வரை அவை கட்டிக் காப்பாற்றப்படுகிறது.

M.K. தர்மலிங்கம்: இவர் எம்ஜிஆர் இடம் பல வருடங்களாக பாதுகாப்பான நம்பிக்கை கூறிய மெய் காப்பாளராக பணியாற்றினார். இவருடைய கெட்டப்கே பார்ப்பதற்கே மிரட்டும் வகையில் இருக்கும்.

N. ஷங்கர்: அதிக வருடம் எம்ஜிஆரிடம் பாடிகார்ட்டாக பணிபுரிந்த இவர், பார்ப்பதற்கே பயமுறுத்தும் வகையில் மிரட்டலான கெட்டப்பில் இருப்பார். இவருடைய குடும்பத்தில் நடக்கும் அத்தனை விஷேசத்திற்கும் எம்ஜிஆர் வேண்டிய பண உதவியை வாரி வழங்குவாராம்.

முத்து: அரசியலிலும் சினிமாவிலும் எம்ஜிஆருக்கு பக்க பலனாக கூடவே இருந்து பாதுகாப்பிற்கும் நம்பிக்கைகுறிய மெய்காப்பாளராக இருந்த இவர் எம்ஜிஆர் வீட்டின் ஒருவராகவே மாறினார்.

நாடார் சிங்: எம்ஜிஆரின் அதிக நம்பிக்கைகுரிய மெய் காப்பாளர் ஆன இவர், எம்ஜிஆர் இறக்கும் வரை கூடவே இருந்து அவரின் நிழலாகவே வலம் வந்தார். இவருடைய குடும்பத்திற்கு தேவையான அத்தனை உதவிகளையும் எம்ஜிஆர் தாமாக முன் வந்து செய்வாராம்.

இவ்வாறு இவர்கள் ஐந்து பேரும் எம்ஜிஆர்க்கு கடைசி வரை உண்மையாக இருந்தனர். இவர்கள் குடும்பத்தை எம்ஜிஆர் நிறைய உதவிகளை செய்து காப்பாற்றியுள்ளார். அதிலும் K.P. ராமகிருஷ்ணன் கடைசி வரை எம்ஜிஆருக்கு டூப் போட்ட ரகசியத்தை கட்டி காப்பாற்றியுள்ளார்.

எம்ஜிஆர் கூடவே இருந்த 5 பாடிகார்ட்ஸ் உடன் எடுத்துக் கொண்ட வைரல் புகைப்படம்

MGR-boduguards-cinemapettai
MGR-boduguards-cinemapettai