விஜயகாந்தை பயன்படுத்திக் கொண்டு, பின் துரோகம் செய்த 5 பிரபலங்கள்.. கேப்டன்- ராவுத்தரை பிரித்த சகுனி
கேப்டனுக்கு துரோகம் செய்த துரோகிகள்.
Five Celebrities Who Used Captain: சினிமாவிலும் அரசியலிலும் தனி ஆதிக்கம் செலுத்தியவர் தான் கேப்டன் விஜயகாந்த். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் எடை குறைவால் காலமானார். இவருடைய மறைவுக்குப் பிறகு அவரைப் பற்றி பல விஷயங்கள் மீடியாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதிலும் யாரும் பசியுடன் இருக்க கூடாது என்று வயிறார உணவளித்த விஜயகாந்த், திரையுலகிலும் தன்னால் முடிந்த உதவிகளை இளம் நடிகர்களுக்கு செய்துள்ளார். அப்படி கேப்டனை தங்களது தேவைகளுக்கு பயன்படுத்திக் கொண்டு. அதன் பின் துரோகிகளாக ஐந்து பிரபலங்கள் மாறி இருக்கின்றனர். வடிவேலு: கேப்டன் சினிமாவில் கொடிகட்டி பறந்த சமயத்தில், வாய்ப்பு கிடைக்காமல் தவித்த வடிவேலுக்கு பல படங்களில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால் அந்த நன்றி விசுவாசம் கொஞ்சம் கூட இல்லாமல், கேப்டன் அரசியலில் இறங்கிய பின் திமுக கட்சியின் பிரச்சார மேடையில் விஜயகாந்தை ‘தண்ணி வண்டி’ என்று படு கேவலமாக விமர்சித்தார். ‘வளர்த்து விட்ட கெடா மார்ல பாய்வது’ போல் கேப்டனை வடிவேலு தொடர்ந்து அவதூறாக பேசினார். இருந்தாலும் கேப்டன், வாய்க்கொழுப்பு வடிவேலு ரெட் கார்ட் வாங்கிய சமயத்தில் கூட தயாரிப்பாளர்களிடமும் இயக்குனர்களிடமும் ‘வடிவேலு பிறவிக் கலைஞர். அவருக்கு வாய்ப்பு கொடுங்கள்’ என்று பரிந்து பேசினார். ஆனால் வடிவேலு இன்றும் தன்னுடைய குணத்தை மாற்றிக் கொள்ளாமல் வளர்த்து விட்ட கேப்டனையே என்ன சங்கதி! என்று கேட்கிறார். அவருடைய மறைவின் போது, இறுதி அஞ்சலி கூட செலுத்த வராமல் நன்றி கெட்ட ஜென்மம் ஆகிவிட்டார். எஸ் தாணு: விஜயகாந்த்-க்கு கலைஞர் கருணாநிதி அவர்களிடம் இருந்து கலைஞர் என்ற பெயரையும், புரட்சி நடிகராக இருந்த எம்ஜிஆர் அரசியலில் இறங்கியதும் புரட்சித் தலைவராக மாறிவிட்டதால், அவரிடம் இருந்து புரட்சி என்ற பெயரையும் சேர்த்து ‘புரட்சி கலைஞர்’ என்ற பெயரை வைத்தது பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தான். இவருக்கு இயக்குனராக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ஆனால் யாரும் வாய்ப்பு தரல. அப்போதுதான் கேப்டன் ஓகே சொல்லி, 90ல் எஸ் தாணு கதை எழுதி, இயக்கி, தயாரித்து, இசையமைத்த படம் தான் புதுப்பாடகன். இந்த படத்தில் கேப்டன் உடன் அமலா ஜோடி போட்டு நடித்திருந்தார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் பிளாப் ஆனது. அந்த சமயத்தில் கேப்டனுக்கு சம்பள பாக்கி இருந்ததால், ராவுத்தர் அதைப் பற்றி கேட்டிருக்கிறார். ஆனால் எஸ் தாணு சகுனி வேலை பார்த்து, இந்த விஷயத்தை பிரேமலதாவிடம் சொல்லி, நண்பர்களாக இருந்த கேப்டன் மற்றும் ராவுத்தரை பிரேமலதாவை வைத்தே பிரித்து விட்டார்.
