நெப்போலியன் ஹீரோவாக மிரட்டிய 5 படங்கள்.. தென்காசி பட்டினத்தில் செம ரகளை செய்த KD & Co
ஆக்டர் நெப்போலியன் ஹீரோவாக நடித்த ஐந்து படங்கள்.
5 films in which Actor Napoleon played the hero: புது நெல்லு புது நாத்து படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் நெப்போலியன், வில்லனாகவும் ஹீரோவாகவும் சுமார் 70 படங்களில் நடித்துள்ளார். இவரை பெரும்பாலும் வில்லனாகவே பார்த்தாலும் அவர் ஹீரோவாக மிரட்டிவிட்ட ஐந்து படங்களை பற்றி பார்ப்போம். சீவலப்பேரி பாண்டி: எஜமான், நாடோடி தென்றல், கிழக்கு சீமையிலே போன்ற படங்களில் வில்லனாக மிரட்டி விட்ட நெப்போலியன், முதல் முதலாக ஹீரோவாக அவதாரம் எடுத்த படம் தான் சீவலப்பேரி பாண்டி. திருநெல்வேலியை மாவட்டத்தில் சீவலப்பேரி என்னும் கிராமத்தில் வாழ்ந்த மறைந்த பாண்டி என்கிற ஒரு உண்மையான நபரின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது தான் இந்த படம். இதில் தன்னை ஏமாற்றியவர்களை பாண்டி பழி வாங்கினாரா, போலீசாரிடமிருந்து தப்பித்தாரா, அவருடைய குடும்பம் என்னவாயிற்று என்பது தான் இந்த படத்தின் கதை. இதில் சீவலப்பேரி பாண்டியாக நெப்போலியன் தன்னுடைய கம்பீரமான நடிப்பை வெளிக்காட்டினார். 90களில் பலருடைய ஃபேவரிட் படமாக இருந்த இந்த படம், இப்போதும் டிவியில் போட்டால் சலிக்காமல் பார்க்கலாம். எட்டுப்பட்டி ராசா: ‘வெளுத்ததெல்லாம் பால்’ என நினைக்கக்கூடிய ஒரு கிராமத்துக் கதாநாயகனாக சிங்கராசா என்ற கேரக்டரில், இந்த படத்தில் நெப்போலியன் நடித்தார். இதில் குஷ்பூ இவருடைய முதல் மனைவி. இந்த படத்தில் மணிவண்ணனின் சூழ்ச்சியால் குஷ்பூ தற்கொலை செய்து கொள்வார். அதன் பின் குஷ்புவின் தங்கை ஊர்வசியை நெப்போலியனின் இரண்டாவது மனைவி ஆக்குவார். அதன் பின்பு தான் குஷ்புவின் மறைவுக்கு மணிவண்ணன் தான் காரணம் என்பது தெரிய வர, பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் இந்த படத்தின் மீதி கதை. இதில் தன்னுடைய மனைவியின் இறப்புக்கு காரணம் தன்னுடைய அறியாமை தான் என்று கூனி குறுகும் நெப்போலியன் நடிப்பு பார்ப்போரை கலங்கடித்தது. இந்த படத்தில் நெப்போலினின் உணர்ச்சி பூர்வமான நடிப்பை பார்க்க முடிந்தது.
