72 வயதிலும் சமீபத்தில் ஹிட்டு கொடுத்த மம்முட்டியின் 5 படங்கள்.. ஜோவுடன் அசத்திய காதல் தி கோர்
மம்மூட்டி நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகி, வெற்றி கண்ட 5படங்கள்.
Actor Mammootty Recent 5 Hit Movies: மலையாள சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் நடிகர் மம்முட்டி, தமிழ் ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் தளபதி படத்தில் தேவராஜ் ஆக நடித்ததின் மூலம் பரீட்சியமானார். 72 வயதாகும் மம்மூட்டியை அவருடைய ரசிகர்கள் செல்லமாக ‘மம்முக்கா’ என்று அழைப்பார்கள். இவருக்கு போட்டியாக இவர் மகன் சினிமாவிற்கு வந்த பிறகும், தொடர்ந்து கதாநாயகனாக மாஸ் கட்டிக் கொண்டிருக்கிறார். அதிலும் இவருடைய நடிப்பில் அடுத்தடுத்து 5 ஹிட்ஸ் கொடுத்திருக்கிறார். பீஷ்ம பர்வம்: இந்தப் படத்தில் மம்முட்டியை ஒரு தாதாவாக காட்டினர். இந்த படத்தின் கதை பழைய ‘காட்பாதர்’, ‘நாயகன்’ படம் போன்றே இருந்தது. இருப்பினும் படத்தில் மம்முட்டியின் நடை, உடை, ஹேர் ஸ்டைல் உள்ளிட்டவை இந்த படத்திற்கு முக்கிய பங்கு வகித்தது. மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடித்த படங்கள் வெளியான நேரத்தில்தான், இன்னும் கதாநாயகன் தான் என பல இடங்களில் மம்முக்கா தன்னை நிரூபிக்கிறார். குறிப்பாக இந்த படத்தின் சண்டைக் காட்சிகளிலும், வில்லன் தன்னிடம் பேரம் பேச வரும்போது ‘வெளியே போ’ என்று துரத்தும் காட்சிகளிலும் செம மாஸ் லுக் விட்டு கலக்கினார். ரோர்சாக்: தனக்கு ஏற்பட்ட பெருங்கொடுமையால் பழிவாங்கும் எண்ணம் உடல் முழுக்க ஊறிப்போன ஒருவரின் தீரா பழி வேட்டையே ‘ரோர்சாக்’. இந்த படத்தின் கதை சாதாரணமாக இருந்தாலும், நான் லீனியர் முறையில் சைக்காலஜிக்கல் திரில்லர் திரைக்கதையாக்கிய விதம் இந்த படத்தின் பிளஸ் பாயிண்ட் ஆக இருந்தது. இதில் மம்முட்டியின் சைக்கோ தனமான நடிப்பை பார்க்க முடிந்தது.
