யானை போல் தலையில் மண்ணை வாரி போடும் இயக்குனர்கள்.. தனுஷ் முதல் ஃபேமிலி ஆடியன்ஸை இழந்த 5 படங்கள்
ஃபேமிலி ஆடியன்ஸை கவராமல் போன 5 படங்கள்.
5 films that failed to impress the family audience: இப்போ இருக்கும் டாப் இயக்குனர்களுக்கு என்னதான் ஆச்சு! என்று கேட்க வைக்கின்றனர். அந்த அளவிற்கு சமீப காலமாகவே டாப் ஹீரோக்களை வைத்து வன்முறையான படங்களை மட்டுமே எடுத்து தங்களுக்கு தானே வேட்டு வச்சுக்கிறார்கள். ஏதாவது ஒன்னு ரெண்டு படங்களில் வன்முறையை காட்டினால் பரவாயில்லை, ஆனால் இப்ப வர படங்கள் எல்லாமே ஓவர் வயலன்ஸ் படங்களாகவே இருக்கிறது. இதனால் தனுஷ் முதல் சிவகார்த்திகேயன் வரை தங்களுக்கு இருந்த ஃபேமிலி ஆடியன்ஸை இழந்து வருகின்றனர். லியோ: இதுவரை விஜய் நடித்த படங்களில் லோகேஷ் இயக்கிய லியோ படத்திற்கு ஏகப்பட்ட விமர்சனங்கள் இருந்தது. ஏனென்றால் இளைய சமுதாயத்திற்கு என்னதான் சொல்ல பார்க்கிறார்கள் என்று பலரும் ஆதங்கப்பட்டனர். லியோ படம் முழுக்க கஞ்சா புகை வாசம் தான் வீசியது. ‘தளபதியே கஞ்சா அடிக்கும் போது நான் அடிச்சா தப்பா!’ என்று இளசுகள் சொல்லும் அளவுக்குகளுக்கு விஜய் தவறான வழிகாட்டியாக இருந்து விட்டாரே! என பலரும் ஆதங்கப்பட்டனர். அதோடு இதில் ஓவரா வயலன்ஸ் கட்டியதால் ஃபேமிலி ஆடியன்ஸின் சப்போர்ட் கிடைக்கவில்லை, இளசுகள் மட்டுமே திரையரங்கில் லியோவை கொண்டாடினார்கள். மார்க் ஆண்டனி: கேங்ஸ்டர் கதையில் டைம் டிராவலை வைத்து ஒரு மசாலா படமாக ஆதிக் ரவிச்சந்தர் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான படம் தான் மார்க் ஆண்டனி. கடந்த சில வருடங்களாகவே விஷாலின் படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. மீண்டும் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை மார்க் ஆண்டனி படத்தின் மூலம் துவங்கினார். ஆனால் இந்த படத்தை பார்க்க குடும்பப் பெண்கள் திரையரங்கில் கால் எடுத்து வைக்க மறுத்து விட்டனர். காரணம் இதில் காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு நிறைய கெட்ட வார்த்தைகள் நிரம்பிக் கிடந்தது. ஜெயிலர்: சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் சேர்ந்து நடித்த ஜெயிலர் படம் வன்முறையின் உச்சம் என்றே சொல்லலாம். ட்ரம்முக்குள் போட்டு ஆசிட் கலந்து மனிதனைக் கொல்வது, நிறைய சண்டை காட்சிகள் என படம் முழுக்க வயலன்ஸ் தான். யானை தன் தலையிலே மண்ணை வாரி போட்டுக் கொள்வது போல், கொஞ்சம் வயலன்ஸை மட்டும் படத்தின் இயக்குனர் நெல்சன் கம்மி பண்ணி இருந்தால் ஜெயிலர் இன்னும் டபுள் மடங்கு வசூலை தட்டி தூக்கி இருக்கும்.

