1. Home
  2. எவர்கிரீன்

இந்த வருடம் ஒளிப்பதிவில் பின்னிய 5 படங்கள்..

இந்த வருடம் ஒளிப்பதிவில் பின்னிய 5 படங்கள்..
இந்த வருடம் வெளிவந்த ஐந்து படங்கள் ஒளிப்பதிவில் அசத்தியிருக்கிறது.

Cinematographer: சினிமாவில் வெளிவரும் படங்களைப் பொறுத்தவரை கதை எந்த அளவுக்கு முக்கியமோ அதே மாதிரி படத்தை அழகான முறையில் கேமரா ஆங்கிள் வைத்து எடுப்பது முக்கியம். கேமராவை வித்தியாசமான முறையில் காட்டி வெவ்வேறு கோணத்தில் படத்தை சரியாக சொல்வதுதான் ஒளிப்பதிவாளரின் முக்கிய பங்காக இருக்கும். அந்த வகையில் இந்த வருடம் வெளிவந்த ஐந்து படங்கள் ஒளிப்பதிவில் அசத்தியிருக்கிறது. அந்த படங்களை பற்றி பார்க்கலாம்.

பொன்னியின் செல்வன்-2: மணிரத்தினம் இயக்கத்தில் இந்த வருடம் வெளிவந்த பொன்னின் செல்வன் இரண்டாம் பாகம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்தது. அந்த வகையில் இதில் காட்டப்படும் ஒவ்வொரு காட்சிகளும் எதார்த்தமாகவும், தத்துரூபமாகவும் அந்த இடங்களை வடிவமைத்து கொடுத்திருப்பார். முக்கியமாக கடலுக்குள் நடக்கும் சண்டை காட்சிகளையும் பிரமிக்கிற அளவிற்கு கொடுத்து இருப்பார். இப்படத்திற்கு ஒளிப்பதிப்பு செய்தவர் ரவிவர்மன்.

போர் தொழில்: அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் இந்த வருடம் போர் தொழில் க்ரைம் மற்றும் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்தது. இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் கலைச்செல்வன் மற்றும் சிவாஜி. ஒவ்வொரு காட்சியும் நாம் அது பக்கத்திலேயே இருந்தே பார்க்கும் அளவிற்கு தத்துரூபமாக வடிவமைத்து கொடுத்திருப்பார். அதனாலேயே நம் நடுக்கத்திலேயே இந்த படம் பார்க்கும் அளவிற்கு பயங்கரமாக இருந்திருக்கும்.

மாமன்னன்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் இந்த மாதம் வெளியான மாமன்னன் திரைப்படம் ரசிகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் தேனி ஈஸ்வர். இப்படத்தில் வடிவமைக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் எதார்த்தமாகவும், அதே நேரத்தில் விலங்குகளை காட்டப்படும் பொழுது அதற்கு ஏற்ற மாதிரி காட்சிகளை கொடுக்கப்பட்டிருக்கும்.

சத்திய சோதனை: சுரேஷ் சங்கையா இயக்கத்தில் சத்திய சோதனை திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்தது. இப்படத்தை ஒளிப்பதிவு செய்தவர் ஆர்வி சரண். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், படத்தில் உள்ள ஒவ்வொரு காட்சிகளும் கிராமத்தில் நடக்கக்கூடிய எதார்த்தமான விஷயங்களை அழகாக சொல்லப்பட்டிருக்கும்.

விடுதலை: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் இந்த வருடம் விடுதலை முதல் பாகம் வெளிவந்தது. இப்படம் முழுக்க முழுக்க காடு, மேடுகளில் படமாக்கப்பட்டிருக்கும். அத்துடன் இதில் வருகிற ஒவ்வொரு சீனும் அழகாக நமக்கு காட்சி அமைத்திருப்பார். இதில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய விஷயம் சூரி, ஹீரோயினை காப்பாற்றுவதற்காக துப்பாக்கியில் சண்டை போடும் காட்சிகள் அனைத்தும் வியக்கும் அளவிற்கு எடுக்கப்பட்டிருக்கும். இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் வேல்ராஜ்.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.