1. Home
  2. எவர்கிரீன்

அஜால் குஜால் ராஜ வாழ்க்கை வாழும் 5 இளசுகள்..

அஜால் குஜால் ராஜ வாழ்க்கை வாழும் 5 இளசுகள்..
இந்த ஐந்து ஹீரோக்கள் நினைத்த நேரத்தில் கேர்ள் பிரண்டுடன் மீட்டிங், விலை உயர்ந்த கார்கள், பார்ட்டி போன்ற ராஜ வாழ்க்கையினை வாழ்கின்றனர்.

Simbu - Atharvaa: பொதுவாகவே சினிமா நடிகர்களின் வாழ்க்கையில் சாட்டிங், டேட்டிங், மீட்டிங் என்ற உல்லாசங்களும், கொண்டாட்டங்களும் நிறைந்த வாழ்க்கையாக இருக்கும் அதிலும் இந்த ஐந்து ஹீரோக்கள் நினைத்த நேரத்தில் கேர்ள் பிரண்டுடன் மீட்டிங், விலை உயர்ந்த கார்கள், பார்ட்டி போன்ற ராஜ வாழ்க்கையினை வாழ்கின்றனர், இதில் சில வாரிசு நடிகர்களும் இருக்கின்றனர்.

சித்தார்த்: பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் சித்தார்த்தும் இதில் ஒருவர் . இவர் திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர், தமிழ் சினிமாவின் பிளேபாய் நடிகர் என பெயர் வாங்கியவர். இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகின்றார். இருப்பினும் சில வருடங்கள் தமிழ் சினிமாவில் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை சமீபத்தில் அவர் நடித்து வெளியான தக்கர் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து இருக்கிறார்.

ஹரிஷ் கல்யாண்: பிக் பாஸ் சீசன் 1 மூலம் ஃபேமஸான நடிகர் ஹரிஷ் கல்யாணும் இவர்களுள் ஒருவர். இவரின் பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் பெண் ரசிகைகள் அதிகமானார்கள். இவருக்கு சமீபத்தில்தான் திருமணமும் நடந்தது. தற்போது தல தோனியின், தோனி என்டர்பிரைசஸ் தயாரிப்பில் லெட்ஸ் கெட் மேரீட் எனும் திரைப்படமும் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.

ஜெய்: இந்த வரிசையில் நடிகர் ஜெய்யும் ஒருவர். இவர் தளபதி 68 திரைப்படத்திலும் நடிக்க உள்ளதாக செய்தி வெளியானது. இவருடன் இணைந்து நடிக்கும் கதாநாயகிகள் காதல் சர்ச்சைகளுக்கு உள் ஆவதால் இவருடன் சேர்ந்து படம் நடிக்க தவிர்த்து வருகின்றனர். இவர் நடித்த சுப்பிரமணியபுரம் படத்தை சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்தனர், அது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.

துருவ் விக்ரம்: இந்த வரிசையில் வாரிசு நடிகர்களும் இடம்பெறுவார்கள். அதில் துருவ் விக்ரமும் ஒருவர். இவர் ஆதித்ய வர்மா என்னும் திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகிற்கு என்ட்ரி கொடுத்தார். நடிப்பில் மட்டுமில்லாமல் பாடலாசிரியராகவும், பின்னணி பாடகர் ஆகவும் பணிபுரிந்து உள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடியை மையமாக வைத்த உருவாகும் படத்தில் துருவ் விக்ரம் நடிக்கிறார்.

அதர்வா: இந்த லிஸ்டில் அதர்வாவும் இடம் பெறுவார். இவர் நடித்து வெளியான படங்களின் மூலம் பெரிதாக எந்த ரீச்சும் கிடைக்கவில்லை. என்னதான் இவர் வரிசையாக படங்கள் பண்ணியிருந்தாலும் அவரின் தந்தை முரளியை போல் இவரால் பேரும் புகழும் வாங்க முடியவில்லை. மேலும் சிம்புவை மிஞ்சும் அளவிற்கு அதர்வா நிறைய கிசுகிசுவில் சிக்கி இருக்கிறார்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.