ஓடிடி மட்டுமே குறிவைக்கும் 5 நடிகைகள்..
Actress Varalakshmi Sarathkumar: சமீபத்தில் மார்க்கெட் இழந்த நடிகைகள் ஓடிடி ரிலீசை குறி வைத்து நடித்து வருகின்றார்கள். படம் வெற்றியோ, தோல்வியோ அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பளம் கரெக்டாக கிடைத்து விடுகிறது. மேலும் அடுத்தடுத்து இது போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் ரசிகர்களுக்கும் இவர்கள் மார்க்கெட்டில் இருப்பதைப் போன்ற ஒரு எண்ணத்தையும் ஏற்படுத்தி விடுகின்றனர். இந்த ஐந்து நடிகைகள் ஓடிடி தளத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து கல்லாகட்டி வருகின்றனர்.
வரலட்சுமி சரத்குமார் : வரலட்சுமி சரத்குமாருக்கு சமீபத்திய ரிலீஸ் ஆன கொன்றால் பாவம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. மேலும் தென்னிந்திய சினிமாவில் அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்பு அதிகமாக கிடைக்க ஆரம்பித்து இருக்கிறது. டேனி, விந்தியா விக்டீம், பகையே காத்திரு போன்ற படங்கள் இவருடைய சிறந்த நடிப்பில் வெளியானவை.
ரெஜினா கசான்றா: ரெஜினா கசான்றாவிற்கு எவரு என்னும் தெலுங்கு திரைப்படம் மிகப்பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது. தெலுங்கு சினிமாவில் இவரை ஓடிடி ராணி என்றே சொல்கின்றார்கள். சூர்ப்பனகை, பர்சி, சாக்கினி டாக்கினி, முகில் போன்ற படங்கள் இவருக்கு ஓடிடியில் ரிலீஸ் ஆகியது.
அமலாபால்: சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி ஹீரோயினாக இருந்த அமலாபாலின் மார்க்கெட் மொத்தமாக ஆடை திரைப்படத்தின் மூலம் மண்ணை கவ்வியது. அதன் பின்னர் கடாவர் என்னும் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். இந்த படம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ரிலீஸ் ஆகியது. ஓடிடி ரிலீஸ் என்பதால் ரொம்பவும் தாராளமாக கவர்ச்சி காட்டி இருந்தார்.
அஞ்சலி: பல வருடம் கழித்து தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த அஞ்சலிக்கு அவர் நடித்த படங்கள் எதுவும் கை கொடுக்கவில்லை. அதன் பின்னர் ஓடிடி ரிலீஸில் கவனம் செலுத்தினார். சமீபத்தில் அவர் நடித்த ஃபால்ஸ் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
ராய் லட்சுமி: ஹீரோயின் ஆக அறிமுகமான ராய் லட்சுமி அதன் பின்னர் மார்க்கெட்டில் இழந்து கிளாமர், வில்லி ரோல் என அத்தனையும் முயற்சி செய்து பார்த்தார். இறுதியில் தற்போது இவருக்கு ஓடிடி ரிலீஸ் படங்கள் கை கொடுத்திருக்கின்றன. தெலுங்கில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். நாக கன்னியா, சிண்ட்ரெல்லா போன்ற படங்கள் இவர் நடித்தது தான்.
