90ஸ் கிட்ஸை மிரட்டிய மன்சூர் அலிகான் 5 படங்கள்
படத்தில் ஹீரோவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவிற்கு வில்லனுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் படம் விறுவிறுப்பாக செல்லும் மேலும் காண்பவர் இடையே எதிர்பார்ப்பை உண்டுப்படுத்தும்.
அந்த வகையில் 90ஸ்களில் வில்லனாய் கலக்கிய மன்சூர் அலிகான் படத்தில் இருந்தாலே போதும் அவரின் வில்லத்தனம் தனியாக பேசப்படும். அவ்வாறு மிரள வைக்கும் இவரின் ஐந்து படங்களை பற்றி இங்கு காண்போம்.
ருத்ரா: 1991ல் சசிமோகன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ருத்ரா. இப்படத்தில் பாக்யராஜ், கௌதமி, லஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் இப்படத்தில் வங்கி கொள்ளை அடிப்பது போன்று காட்சிகள் இடம் பெற்றிருக்கும். மேலும் கிரிமினலாக வரும் மன்சூர் அலிகான் போலீசுக்கு தண்ணி காட்டிவிட்டு கொலை செய்வது போன்று கதை அமைந்திருக்கும்.
கேப்டன் பிரபாகரன்: 1991ல் ஆர் கே செல்வமணி இயக்கத்தில் வெளிவந்த இப்படம் விஜயகாந்தின் நூறாவது படம் ஆகும். இப்படத்தில் மன்சூர் அலிகான், விஜயகாந்த், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருப்பார்கள். வீரப்பன் கதையின் சம்பவத்தை மையமாகக் கொண்டே இப்படம் எடுக்கப்பட்டிருக்கும். இப்படத்தில் வரும் வீரபத்திரன் கதாபாத்திரம் இவருக்கு நல்ல பேரை பெற்று தந்தது.
நாளைய தீர்ப்பு: 1992ல் ஏ சந்திரசேகரன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் நாளைய தீர்ப்பு. இப்படத்தில் ராதாரவி, சரத்பாபு, கீர்த்தனா, விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் மன்சூர் அலிகான் இப்படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக நடித்திருப்பார். இவரின் வில்லத்தனம் இப்படத்திற்கு கூடுதல் வெற்றியை தேடி தந்தது.
செம்பருத்தி: 1992ல் ஆர் கே செல்வமணி இயக்கத்தில் வெளிவந்த படம் தான் செம்பருத்தி. இப்படத்தில் பிரசாந்த், ரோஜா, நாசர், ராதாரவி ஆகியோர் இடம்பெற்று இருப்பார்கள். மேலும் மீனவ குப்பத்தில் இருக்கும் மன்சூர் அலிகான் மற்றும் நாசர் இப்படத்தில் வில்லனாக நடித்திருப்பார்கள். இப்படம் இவருக்கு மேலும் பல படவாய்ப்புகளை பெற்று தந்தது.
நட்புக்காக: 1998ல் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார், சிம்ரன், விஜயகுமார் ஆகியோர் முன்னணி நடிகர்களாக நடித்திருக்கிறார்கள். மேலும் திரைப்படத்தில் விஜயகுமாரின் மாப்பிள்ளையாக வருவார் மன்சூர் அலிகான். இப்படத்தில் இவருக்கு நெகட்டிவ் ரோல் கொடுத்திருந்தாலும் அவை பெரிதாக பேசப்படவில்லை என்றே கூறலாம். ஆனாலும் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.
