1. Home
  2. எவர்கிரீன்

சித்ரா, சுசிலா மாதிரி வரவேண்டிய 5 பாடகி நடிகைகள்..

சித்ரா, சுசிலா மாதிரி வரவேண்டிய 5 பாடகி நடிகைகள்..
பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்து வரும் 5 நடிகைகள்.

நடிகைகள் என்றாலே பல தனித் திறமைகள் இருந்தால் தான் அவர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். அதில் சில நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பது, குடும்ப குத்துவிளக்காக நடிப்பது, சிலர் நகைச்சுவை உணர்வுடன் நடிப்பது என தங்களது மார்க்கெட்டை அதிகரித்து வருகின்றனர். அந்த வகையில், சில நடிகைகள் நடனம் ஆடுவது, பாடல்கள் பாடுவது என நடிப்பதை தாண்டி சில திறமைகளையும் வளர்த்துள்ளனர். அப்படி பாட்டு பாடி ரசிகர்களை கவர்ந்த 5 நடிகைகளை பற்றி தற்போது பார்க்கலாம்.

ஸ்ருதிஹாசன்: உலகநாயகன் கமலஹாசனின் மூத்த மகளான இவர், கமலஹாசன் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து சூர்யாவின் ஏழாம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக களமிறங்கினார். மேலும் நடிப்பின் மீது அதிகம் ஆர்வம் செலுத்திய இவர், அவ்வப்போது அவரே இசையமைக்கும் பாடல்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். இவரது குரலில் வெளியான கண்ணழகா, வானம் எல்லை, எல்லே லம்மா உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவை.

நஸ்ரியா : மலையாள நடிகையான இவர் தமிழில், ராஜா ராணி, நய்யாண்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இந்த படங்களின் மூலமாக ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த இவர், நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டு செட்டிலானார். தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து வரும் இவர், மலையாளத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அதிலும் பெங்களூர் டேஸ் படத்தில் நஸ்ரியா பாடிய எண்ட கண்ணே பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டானது.

நித்யா மேனன்: மலையாளம், தமிழ், தெலுங்கு என ஒரு ரவுண்டு வரும் இவர், இந்தியா முழுவதும் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். கடந்தாண்டு இவர் நடிகர் தனுஷுடன் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் செம ஹிட்டான நிலையில், ஷோபனா என்ற கதாபாத்திரத்தால் ரசிகர்களை கவர்ந்திழுத்தார். இதனிடையே இவர் மலையாளத்தில் மட்டும் பல திரைப்படங்களில் பாடல்களை பாடி, விருதுகளையும் பெற்றவர்.

ஆண்ட்ரியா: நடிகை ஆண்ட்ரியா ஆரம்பத்தில் பாடகியாக அறிமுகமான நிலையில், தொடர்ந்து தனது திறமையால் சிறந்த நடிகையாக விளங்கி வருகிறார். மேலும் இவர் முதலில் அறிமுகமான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் இடம்பெற்ற உன் சிரிப்பினில் பாடலை பாடி நம் அனைவரையும் சொக்க வைத்திருப்பார். இப்பாடலை தொடர்ந்து கோவா படத்தில் இடம்பெற்ற இதுவரை பாடல் இன்று வரை அவரது மார்க்கெட்டை தக்க வைத்த பாடலாகும்.

ரம்யா நம்பீசன்: மலையாள நடிகையான இவர் தமிழில் சேதுபதி, பிட்சா, குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் மலையாள படங்களில் பல பாடல்களை பாடி புகழ்பெற்றார். மேலும் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான பாண்டிய நாடு திரைப்படத்தில் இடம்பெற்ற ஃபை, ஃபை என்ற பாடலை பாடி ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்தார். தொடர்ந்து பல பாடல்களை தமிழில் பாடிய இவர், தற்போது ரியாலிட்டி ஷோக்களில் ஜட்ஜாக வலம் வருகிறார்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.