Cinema : சினிமாவில் முதலில் நட்பாக இருந்த நடிகர்களின் பிணைப்பு பின்பு நாளடைவில் சண்டையில் முடிந்துள்ளது என சினிமா வட்டார பகுதியில் இருந்து ஒரு சீக்ரெட் செய்தி கசிந்துள்ளது.
அஜித்-விஜய் :
1990-களில் மிகவும் நட்பாக இருந்தவர்கள் அஜித் மற்றும் விஜய். பின்பு நாளடைவில் இருவர்களுக்கு ரசிகர்கள் பட்டாலும் அதிகரித்தது. இதற்கிடையில் சில நாட்கள் இவர்களுக்கு மன சங்கடம் இருந்ததாக கூறப்படுகிறது. நாட்கள் செல்ல செல்ல அது மறைந்து மீண்டும் நண்பர்களாகவே மாறிவிட்டனர். இவர்கள் நட்பாக இருந்தாலும் ரசிகர்கள் விட மாட்டார்கள் போல அந்த அளவிற்கு விஜய் வெறியன், அஜித் வெறியன் என்று ஒரு கும்பல் சுற்றிக் கொண்டிருக்கிறது.
சிம்பு-தனுஷ் :
சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் பொது முகங்களாக அறிமுகமான போதே சிம்புவும், தனுஷும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். ரசிகர்களின் போட்டி, யாருடைய நடனம் நல்லா இருக்கிறது, யாருடைய நடிப்ப நல்லா இருக்கிறது என்பதில் சில மன சிக்கல்கள் இவர்களுக்குள் ஏற்பட்டது. ஆனால் சமீபத்திய நிகழ்ச்சியில் இருவரும் இணைந்தனர்.
விஜய்-சூர்யா :
ஒரே காலகட்டத்தில் தங்களது சினிமா வாழ்க்கையை இருவரும் தொடங்கியுள்ளனர். பாக்ஸ் ஆபிஸ் போட்டி காரணமாக இவர்கள் நட்பில் சிறு விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் எந்த ஊரு திரைப்படம் நிகழ்ச்சியிலும் இவர்கள் விரோதத்தை காட்டாமல் இருக்கிறார்கள். தற்போது இருவரும் இணைந்து நிலையில் அந்த அளவுக்கு பேச்சுவார்த்தை இல்லை என்பது தெரிகிறது.
சத்யராஜ்-ரஜினிகாந்த் :
1980 காலம் கட்டங்களில் இவர்கள் நட்பு நல்ல நிலையில் தான் இருந்துள்ளது. ஆனால் சில பேட்டிகளில் சத்யராஜ், ரஜினியின் அரசியல் குறித்து பேசியது தான் இவர்கள் நட்பு முறிவுக்கு காரணம் என சினிமா வட்டாரம் கூறுகிறது. ஆனால் இவர்களுக்குள் தற்போது நேரடி பிரச்சனை எதுவும் இல்லை. ஆனால் முன்பு இருந்த நெருக்கம் இப்போது தென்படவில்லை.
விக்ரம்-விஷால் :
சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் விக்ரமுக்கும், விஷாலுக்கும் ஒரு நெருங்கிய நட்பு இருந்ததாக தெரிகிறது. விஷாலின் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் போன்றவற்றில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்கள் நட்பு பலம் இழந்துள்ளது. இவர்களுக்குள் நேரடி சண்டை எதுவும் தற்போது இல்லை.