வித்தியாசமாய் நடிக்க வரும்னு விஜய் மொக்கை வாங்கிய 5 படங்கள்..
Actor Vijay: படத்தில், விஜய் நடிப்பிற்கு என ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு உண்டு. அவை இடம்பெற்றால் படம் கண்டிப்பாக சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து விடும். அவ்வாறு இல்லாமல், வித்தியாசமாக நடிக்க வரும்னு விஜய் மேற்கொண்ட புது முயற்சியால் மொக்கை வாங்கிய 5 படங்களை பற்றி இங்கு காண்போம்.
பிரியமுடன்: வின்சென்ட் செல்வா இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் விஜய், கௌசல்யா, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். தான், தான் எல்லாம் என்ற அகந்தை கொண்ட வித்தியாசமான கதாபாத்திரத்தில் தன் நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார் விஜய். இருப்பினும் இப்படம் 100 நாள் திரையில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணுக்குள் நிலவு: 2000ல் பசில் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் விஜய், ஷாலினி, காவேரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் இசையை ஆராயும் நபராய் விபத்து ஏற்பட்டு, நரம்பு சம்பந்தமான பிரச்சனையில் சிக்கி தவிக்கும் கௌதம் கதாபாத்திரத்தில் தன் நடிப்பினை சிறப்புற வெளிக்காட்டி இருப்பார் விஜய். இருப்பினும் இப்படத்தின் பாடலால் இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது.
உதயா: அழகம் பெருமாள் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் விஜய், சிம்ரன், நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பையும், உதறித் தள்ளிவிட்டு காலேஜ் வாத்தியாராய் நடிப்பை மேற்கொண்டு இருப்பார் விஜய். அதை தவிர்த்து இப்படத்தின் கதை பெரிதளவு பேசப்படவில்லை. இருப்பினும் ஏ ஆர் ரகுமானின் உதயா பாடல் இப்படத்திற்கு கூடுதல் சிறப்பாய் அமைந்தது.
புலி: 2015ல் சிம்புதேவன் இயக்கத்தில் ஃபேண்டஸி மூவியாய் வெளிவந்த இப்படத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், அனுஷ்கா மோத்வானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் வேதாளத்தை தெய்வமாக பார்க்கும் பழங்குடியினரை மேம்படுத்தி கதை அமைக்கப்பட்டு இருக்கும். இருப்பினும் இப்படம் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கலவையான விமர்சனங்களையே பெற்று தந்தது.
அழகிய தமிழ் மகன்: 2007ல் பரதன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்திலும், நமிதா, ஸ்ரேயா சரண், சந்தானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். விஜய் இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரம் ஏற்று வில்லனாக தன் நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தாலும், மக்களிடையே சுமாரான விமர்சனங்களையே பெற்று தந்தது.
