2025-ன் பாக்ஸ் ஆபீஸ் வேட்டை.. 500 கோடி கிளப்பில் இணைந்த 5 படங்கள்!
2025 ஆம் ஆண்டு இந்திய சினிமா பாக்ஸ் ஆபிஸில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த ஆண்டில் ₹500 கோடியைத் தாண்டி வசூல் செய்து, பார்வையாளர்களின் ஆதரவையும் விமர்சகர்களின் கவனத்தையும் ஒருசேர பெற்றுள்ளன.
இந்தியத் திரையுலகம் 2024-ன் வெற்றிகளைத் தொடர்ந்து, 2025-ம் ஆண்டிலும் வசூல் சாதனைகளைத் தகர்த்து வருகிறது. இந்த ஆண்டு வெளியான படங்களில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐந்து திரைப்படங்கள் மட்டுமே உலகளாவிய ரீதியில் ரூ. 500 கோடி என்ற மைல்கல்லைக் கடந்து சாதனை படைத்துள்ளன. இதில் பிரம்மாண்டமான வரலாற்றுப் படங்கள் முதல் அதிரடி ஆக்ஷன் திரைப்படங்கள் வரை அடங்கும்.
தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'துரந்தர்' (Dhurandhar) திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்து வருகிறது. சமீபத்திய நிலவரப்படி, இப்படம் ரூ. 500 கோடி வசூலை அதிகாரப்பூர்வமாகக் கடந்து பீஸ்ட் மோடில் உள்ளது.
காந்தாரா சாப்டர் 1 ரிஷப் ஷெட்டியின் பிரம்மாண்ட படைப்பான இது, அதன் மேக்கிங் மற்றும் கலாச்சாரப் பின்னணிக்காக இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் வசூலை வாரிக் குவித்தது. 850 கோடிக்கும் மேல் வசூலித்து இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த திரைப்படமாக முதலிடத்தில் உள்ளது. இது ஒரு பான்-இந்தியன் வெற்றியாக, கலாச்சார வேறுபாடுகளைக் கடந்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
சாவா மராட்டிய வீரர் சம்பாஜி மகாராஜின் வாழ்க்கை வரலாற்றைப் பேசும் இப்படம், எமோஷனல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்காக 500 கோடி கிளப்பில் இடம்பிடித்தது. விக்கி கௌஷலின் இந்த வரலாற்றுப் படம் சுமார் 797 கோடி வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
சையாரா ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன் வந்த இப்படம், இளைஞர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களின் பேராதரவால் இந்த ஆண்டுக்கான டாப் லிஸ்டில் இணைந்துள்ளது. 579 கோடிக்கு மேல் வசூலித்து, வெளிநாட்டுச் சந்தைகளில் குறிப்பாக வலிமையான வரவேற்பைப் பெற்றது.
கூலி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான படம், ஆரம்பம் முதலே வசூல் வேட்டையைத் தொடங்கி குறுகிய காலத்திலேயே இந்த இலக்கை எட்டியது. இப்படம் 514 கோடி முதல் 675 கோடி வரை வசூலித்து, பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இடம்பிடித்தது.
மொத்தத்தில், 2025 ஆம் ஆண்டு இந்திய சினிமா பாக்ஸ் ஆபிஸில் தரமும் பிரம்மாண்டமும் ஒன்றிணைந்தால் எவ்வளவு பெரிய சாதனைகள் நிகழும் என்பதற்கான சிறந்த உதாரணமாக இந்த ஐந்து திரைப்படங்கள் திகழ்கின்றன.
