வாய்ப்புக்காக அலையாமலேயே பெரிய நடிகர்களாக மாறிய 6 பிரபலங்கள்
Tallented actors: நேரமும் காலமும் கூடி வந்தால் எல்லாம் பொற்காலமாக தான் அமையும். அதற்கு ஏற்ப சினிமாவில் வாய்ப்புக்காக தேடிக் கொண்டிருக்கும் பிரபலங்களுக்கு மத்தியில் சில நடிகர்கள் வாய்ப்புக்காக எங்கேயும் அலையாமல் அவர்களைத் தேடி வந்த வாய்ப்பை நடித்து கொடுத்து அதன் மூலம் பெரிய நடிகர்களாக மாறி இருக்கிறார்கள். அந்த நடிகர்களை பற்றி பார்க்கலாம்.
பாண்டியராஜன்: இவர் சினிமாவில் எப்படியாவது ஹீரோவாகி விட வேண்டும் என்ற ஆசையுடன் நுழைந்தவர். அப்படிப்பட்ட இவருடைய உயரம் மற்றும் தோற்றம் காரணமாக இவரால் ஹீரோவாக முடியவில்லை. அதன் பின் உதவி இயக்குனராக கே.பாக்யராஜ் இடம் சேர்ந்து டார்லிங் டார்லிங் டார்லிங் என்ற படத்தில் பணியாற்றி இருக்கிறார். அடுத்ததாக கன்னி ராசி என்ற படத்தை இயக்கி இயக்குனராக சாதனை பெற்றிருக்கிறார். இதனை வைத்து தொடர்ந்து இவருடைய முகத்தை கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் காட்டி என்னாலையும் ஹீரோவாக முடியும் என்று இவரை வளர்த்துக் கொண்டார்.
ரேவதி: இவர் ஆரம்பத்தில் பேஷன் ஷோவில் பங்கேற்று அந்த நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படம் பிரபல தமிழ் இதழில் அட்டை பக்கத்தில் படமாக வெளியிடப்பட்டது. அப்பொழுது பாரதிராஜா இந்த புகைப்படத்தை பார்த்ததும் அவருடைய கதை படி, ரேவதி நடித்தால் நன்றாக இருக்கும் என்பதால் மண்வாசனை படத்திற்கு தேடிப் பிடித்து நடிக்க வைத்திருக்கிறார். அதன்பின் இவரின் கைராசியால் ரேவதியின் சினிமா கேரியர் சூடு பிடித்து விட்டது.
சுதாகர்: இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் 600க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி இருக்கிறார். இதில் இவருடைய கல்லூரி நண்பர்கள் மூலம் ராதிகாவுடன் ஹீரோவாகும் வாய்ப்பு சுதாகருக்கு கிடைத்தது. அப்படி இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படம் தான் கிழக்கே போகும் ரயில். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து சுதாகருக்கு பட வாய்ப்பு தேடி வந்தது.
தியாகராஜன்: இவர் சினிமாவில் வருவதற்கு முன் பெரிய தொழிலதிபராக இருந்த நிலையில் அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து இவரை தேடி இயக்குனர்கள் பலரும் இந்த கதாபாத்திரத்தில் நீங்கள் நடித்தால் மட்டுமே நன்றாக இருக்கும் என்று இவரை வற்புறுத்தி கூப்பிட்டு நடிக்க வைத்து இருக்கிறார்கள்.
தீபன்: சில படங்கள் எப்பொழுதும் காலத்தால் அழியாத காவியமாக மக்கள் மனதில் நிலைத்து கொண்டிருக்கும். அப்படி பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் முதல் மரியாதை. இப்படத்தில் தீபன் என்பவர் செல்லக்கண்ணு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்த நிலாவத்தான கையில புடிச்ச என்கிற பாடலில் தன்னுடைய அப்பாவிதமான முகத்துடன் காதலின் மேல் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தி நடித்திருப்பார். இந்த வாய்ப்பு இவருக்கு அந்த கிராமத்தில் இருக்கும் பொழுது பாரதிராஜா இந்த கேரக்டருக்கு பொருத்தமான நடிகர் என்று கூப்பிட்டு நடிக்க வைத்திருக்கிறார்.
இளவரசு: இவரை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியதே பாரதிராஜா தான் என்றே சொல்லலாம். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த முதல் மரியாதை என்ற படத்தில் சிறிய கேரக்டரில் அறிமுகமானதை தொடர்ந்து கடலோர கவிதைகள், வேதம் புதிது, பொற்காலம், வெற்றி கொடி கட்டு போன்ற பல படங்களில் நடித்து தற்போது வரை சினிமா கேரியரில் நிலைத்து நிற்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.
