1. Home
  2. எவர்கிரீன்

எப்பதான் சாமி முடிப்பீங்க, பாகங்களாக வரும் 6 படங்கள்..

எப்பதான் சாமி முடிப்பீங்க, பாகங்களாக வரும் 6 படங்கள்..
ராகவா லாரன்ஸ் நடிப்பில் திகிலூட்டும் பேய் படமாய் வெளிவந்த படம் தான் காஞ்சனா.

6 Movies: படத்தின் சுவாரஸியத்தை கொண்டு படம் வெற்றி பெறுவதை தீர்மானிக்க முடிகிறது. இந்நிலையில் படம் பார்க்க வரும் மக்களிடையே சலிப்பை ஏற்படுத்தாத விதமாய் கதை அமைந்திருந்தால் அப்படம் வெற்றி கண்டு விடும். அவ்வாறு இல்லாமல் ஒரே படத்தை பல பாகங்களாக கொண்டு செல்லும் 6 படங்கள் பற்றிய தகவலை இங்கு காண்போம்.

விக்ரம்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாய் கமல் நடிப்பில் வெளிவந்து வெற்றி கண்ட படம் தான் விக்ரம். இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்த நிலையில், தற்பொழுது இப்படத்தின் பாகம் 2ம் வெளிவரும் என தகவல் வெளியாகி உள்ளது.

காஞ்சனா: ராகவா லாரன்ஸ் நடிப்பில் திகிலூட்டும் பேய் படமாய் வெளிவந்த படம் தான் காஞ்சனா. இப்படம் மக்களிடையே பெரிதாய் பார்க்கப்பட்ட நிலையில், இதன் பாகம் ஒன்று இரண்டு மூன்று என போய்க்கொண்டே இருக்கிறது. அனைத்து பாகங்களிலும் ஒரே கான்செப்ட்டை பின்பற்றி வருகின்றனர்.

அரண்மனை: சுந்தர் சி யின் இயக்கத்தில் எண்ணற்றப்படங்கள் வெற்றியைக் கண்டிருக்கிறது. அவ்வாறு இவர் படைப்பில் திகிலூட்டும் திரில்லர் படம் தான் அரண்மனை. இப்படமும் பல பாகங்களாக எடுத்து அரைச்ச மாவை அரைத்து வருகிறார் சுந்தர் சி என விமர்சிக்கப்படுகிறது.

சிங்கம்: ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியை கண்ட படம் தான் சிங்கம். அவ்வாறு இருப்பின் இயக்குனர் ஹரி படம் எடுக்க ஆசைப்பட்டால் எந்த நேரமும் இந்தப் படத்தைக் கொண்டு பாகங்களாக வெளியிட்டு வருகிறார். இது பார்க்கவே சலிப்பை ஏற்படுத்தி வருகிறது.

டிமான்ட்டி காலனி: 2015ல் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் திகில் ஊட்டும் படமாய் அருள்நிதி, ரமேஷ் திலக் நடிப்பில் வெளிவந்த படம் தான் டிமான்ட்டி காலனி. இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸ் வசூலை கண்டது. அதை தொடர்ந்து இப்படம் மூன்று, நான்கு பாகங்களாக வெளிவர இருக்கிறதாம்.

எந்திரன்: ஷங்கர் தயாரிப்பில் தொழில்நுட்ப உதவியோடு, ரஜினி நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்த படம் தான் எந்திரன். அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் வசூல் ரீதியாய் மாபெரும் வெற்றியை கண்டது. அதைத்தொடர்ந்து 2018ல் இதன் பாகம் 2 சுமார் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.