1. Home
  2. எவர்கிரீன்

போலீஸ் கதாபாத்திரத்தில் தண்ணி காட்டிய 6 ஹீரோக்கள்.. கேப்டன் பிரபாகரனாக பட்டையை கிளப்பிய விஜயகாந்த்

போலீஸ் கதாபாத்திரத்தில் தண்ணி காட்டிய 6 ஹீரோக்கள்.. கேப்டன் பிரபாகரனாக பட்டையை கிளப்பிய விஜயகாந்த்
போலீஸ் கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்த 6 நடிகர்கள்.

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களாக இருக்கக்கூடிய நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். அதிலும் சிறப்பாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து அதற்கென தனி இடத்தையும், புகழையும் ஒரு சில நடிகர்கள் மட்டுமே பெற்றுள்ளனர். அப்படி போலீஸ் ரோலில் நடித்து தண்ணி காட்டிய 6 நடிகர்களை இங்கு பார்க்கலாம்.

ரஜினிகாந்த்: சினிமாவில் போலீஸ் கதாபத்திரத்திற்கு உண்டான பாணியை மாற்றி, ஸ்டைலிஷ் போலீஸ் ஆக வலம் வந்தவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதிலும் இவர் மூன்று வேடங்களில் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் மூன்று முகம். இப்படத்தில் அலெக்ஸ் பாண்டியன் ஆக போலீஸ் கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பி இருப்பார். மேலும் இப்படம் 250 நாட்கள் திரையில் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த தர்பார் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கமலஹாசன்: இவர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் ஆன குருதிப்புனல், காக்கி சட்டை, வேட்டையாடு விளையாடு போன்ற படங்கள் ஆகும். அதிலும் இவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இவர் நடித்த வேட்டையாடு விளையாடு திரைப்படம் ரசிகர்களின் ஃபேவரட் லிஸ்டில் ஒன்றாகவே உள்ளது.

விஜயகாந்த்: இவர் தனது படங்களில் தேசப்பற்று நிறைந்த கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடிக்கக் கூடியவர். இவர் போலீஸ் அதிகாரியாக நடித்து வெளிவந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதிலும் கேப்டன் பிரபாகரன், சேதுபதி ஐபிஎஸ், வல்லரசு போன்ற படங்களில் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.

விஜய்: இவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து சூப்பர் ஹிட் அடித்த மூன்று படங்களான போக்கிரி, ஜில்லா, தெறி ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் ஆகும். அதிலும் தெறி படத்தில் விஜயகுமார் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து ரவுடிகளை தெறிக்க விட்டிருப்பார். காவல்துறை அதிகாரியாக திரையில் மாஸாக வலம் வரும் இவர் பல்வேறு பரிமாணங்களில் தனது நடிப்பு  திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.

சூர்யா: இவரின் திரை வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் தான் காக்க காக்க. இதில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெண் ரசிகைகளின் மனதை கொள்ளை கொண்டார். இதனைத் தொடர்ந்து சிங்கம் படத்தில் ஆக்சன் போலீசாக மிரட்டி இருப்பார். மேலும் இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. போலீஸ் என்றால் சூர்யா தான் என்று அளவிற்கு தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.

விக்ரம்: இவர் நடிப்பில் போலீஸ் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த படங்கள் அதிக அளவில் வெளிவராமல் இருந்தாலும், சாமி படத்தில் இவர் நடித்த கதாபாத்திரத்திற்கு உயிரூட்ட கூடிய வகையில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருப்பார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் வெளிவந்து வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.