இந்தியளவில் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்த ஆறு படங்கள்.. ஜெய்லர் முடியாததால் லியோவுக்கு நெருக்கடி
வெட்கக்கேடு என்னவென்றால் தமிழ் திரையுலகில் இருந்து ஒரு படம் கூட இடம் பிடிக்கவில்லை
பொதுவாக திரைப்படங்கள் 500 கோடி வசூலை பெற்றது என்றாலே சாதனை என சொல்லுவார்கள். ஆனால் இங்கு திரையரங்குகளில் வெளியாகி தெறிக்க விட்டு, ஆயிரம் கோடிக்கு மேலே வசூலை அதிர விட்ட படங்கள் என்ன என்று பார்க்கலாம். வெட்கக்கேடு என்னவென்றால் தமிழ் திரையுலகில் இருந்து ஒரு படம் கூட இடம் பிடிக்கவில்லை என்பதே ஜெயிலரால் முடியாததை லியோ சாதிக்குதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம். தங்கள்: நித்திஷ் திவாரி இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு, 70 கோடி பட்ஜெட்டில் ஹிந்தியில் வெளிவந்த திரைப்படம் தங்கள். இதில் ஹீரோ அமீர்கானுக்கு மல்யுத்தத்தில் இந்தியாவுக்காக சாதிக்க வேண்டும் என கனவோடு இருப்பார். ஆனால் அவரால் முடியாது, அவரின் மகள்களை வைத்து சாதிக்கிறாரா இல்லையா என்பதே திரைப்படத்தின் கதை ஆகும். இது கர்ணம் தப்பினால் மரணம் என்பது போல் உருவான படம். 1000/கோடி வரை வசூலை குவித்துள்ளது. பாகுபலி: ராஜமவுலி இயக்கத்தில் 2017ல் வெளியான தெலுங்கு திரைப்படம் பாகுபலி. இதில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்தியராஜ், நாசர் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். 250 கோடி தயாரிப்பில் வெளியான இந்த படம் தற்போது 1800 கோடி வரை வசுலை அள்ளியது. RRR: ராஜமௌலி இயக்கத்தில் 2022 இல் தெலுங்கில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் திரையுலகையே அதிர வைத்த திரைப்படம் ட்ரிபிள் ஆர். பிரிட்டிஷ் இந்தியா காலகட்டத்தில் காட்டுவாசி குழந்தையை கடத்திக் கொண்டு வந்த போலீஸிடம் இருந்து குழந்தையை மீட்பது கதையாகும். படத்திற்கு 550 கோடி பட்ஜெட்டில் செலவு செய்து, தற்போது 1260 கோடி வரை வசூல் ஆகி உள்ளது. KGF: பிரசாந்த் நீல் இயக்கத்தில் 2022ல் யாஷ் நடித்து கன்னடத்தில் வெளியான திரைப்படம் கேஜிஎப் சாப்டர் 2. 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் போன்ற மொழிகளில் பாண் இந்தியா மூவியாக ரிலீஸ் செய்யப்பட்ட படம். ரிலீஸ் ஆகி தற்போது வரை 1000/ கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. பதான்: சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 2023 ஆக்சன் திரில்லர் திரைப்படமாக இந்தியில் வெளியானது பதான். இரண்டு இந்திய ஏஜெண்டுகளின் இடையே நடக்கும் மோதல்களே திரைப்படம் ஆகும். சுமார் 225 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம்,1060 கோடி வசூலித்துள்ளது. இத்திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சண்டை காட்சிகள் எல்லாம் பயங்கர மாஸாக இருந்தது. திரையரங்குகளில் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர். ஜவான்: அட்லீ இயக்கத்தில் தற்போது 2023 ஹிந்தியில் ஆக்ஷன் திரில்லர் படமாக வெளிவந்தது ஜவான். இதில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்துள்ளனர். சமூகத்தில் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகளும், அரசாங்கத்திற்கு எதிராக போராடும் கொள்கைகளும் கொண்ட திரைப்படம் ஆகும். 300 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், 1025 கோடி வரை தற்போது வசூலித்துள்ளது.
