1. Home
  2. எவர்கிரீன்

அட்டகாசமான 6 கொரியன் படங்கள் நம்ம தமிழில்.. வைரஸை வைத்து 2 மணி நேரம் மிரட்டிய 'எமெர்ஜென்சி டிக்ளரேசன்'

அட்டகாசமான 6 கொரியன் படங்கள் நம்ம தமிழில்.. வைரஸை வைத்து 2 மணி நேரம் மிரட்டிய 'எமெர்ஜென்சி டிக்ளரேசன்'

Korean Movies: 'வசனமா முக்கியம் படத்த பாரு, என விவேக் காமெடியில் ஒரு டயலாக் வரும். அப்படித்தான் நல்ல திரைக்கதை கொண்ட படங்களை எந்த மொழியில் இருந்தாலும் தேடிப் பார்த்து சிலாகித்து விட வேண்டும். நம்மில் பலருக்கும் கொரியன் படங்கள் மீது அவ்வளவு ஆக ஈடுபாடு எதுவும் இருக்காது.

கொரியன் சீரிஸ் மற்றும் பாடல்களை பெண்கள் மட்டும் தான் கேட்பார்கள் என்றெல்லாம் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அங்கேயும் நல்ல கதைகளை கொண்ட படங்கள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. அதில் ஆறு படங்களை பற்றியம், அவை எந்தெந்த OTT தளங்களில் இருக்கிறது என்று பார்க்கலாம்.

அட்டகாசமான 6 கொரியன் படங்கள்

எமெர்ஜென்சி டிக்ளரேசன்: படத்தின் ஹீரோ புலனாய்வு அதிகாரி. விமானம் ஒன்றில் தற்கொலை தாக்குதல் நடக்க இருப்பதாக செய்தி கிடைக்கிறது. அதே நேரத்தில் அந்த விமானத்தில் மர்மமான ஒரு நபர் இறந்து விடுகிறார்.

அந்த மரணத்தை விசாரிக்கும் போது தான் அந்த நபர் ஒரு வைரஸை பரப்பி விட்டு இறந்து விடுகிறார் என்பது தெரிகிறது. இதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவம் தான் இந்த படத்தின் கதை.

OTT: அமேசான் ப்ரைம் வீடியோ
IMDB ரேட்டிங்: 6.9/10

தி சஸ்பெக்ட்: இந்த படத்தின் ஹீரோ ஒரு சிறப்பு புலனாய்வு அதிகாரி. சூழ்ச்சியால் சொந்த அரசாங்கத்தாலையே கைவிடப்படுகிறார். அதே நேரத்தில் அவருடைய மனைவி மற்றும் மகள்கள் சீனாவுக்கு அடிமைகளாக நாடு கடத்தப்படுகிறார்கள்.

தன்னுடைய குடும்பத்தை தேடி சீனாவிற்கு பயணிக்கும் இவர் கடைசியில் அவர்களுடைய பிணங்களை தான் பார்க்கிறார். இதற்கெல்லாம் யார் காரணம் என்று தெரிந்து பழிவாங்க மறைமுக வாழ்க்கை வாழ்கிறார் அங்கேயும் அவருக்கு பெரிய சிக்கல் ஏற்படுகிறது. அதை எல்லாம் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

OTT: அமேசான் ப்ரைம் வீடியோ
IMDB ரேட்டிங்: 6.8/10

ஹார்ட் ஹிட்: வங்கியின் மேலாளராக இருக்கும் ஹீரோ தன் மகன் மற்றும் மகளுடன் காரில் பயணிக்கிறார். அப்போது மர்ம நபர் ஒருவர் போன் செய்து காருக்கு அடியில் வெடிகுண்டு இருப்பதாகவும், காரை நிறுத்தினால் வெடித்து விடும் என்றும் மிரட்டுகிறார்.

தன் பிள்ளைகளை காப்பாற்ற போராடும் ஹீரோ ஒரு கட்டத்தில் அந்த மர்ம நபர் யார், அவருடைய குடும்பத்தை தான் எவ்வாறு கெடுத்தோம் என அறிந்து கொள்கிறான். அதன் பின்னர் நடக்கும் சம்பவம் தான் படத்தின் கிளைமாக்ஸ்.

OTT: அமேசான் ப்ரைம் வீடியோ
IMDB ரேட்டிங்: 6.3/10

மிட்நைட் FM: படத்தின் ஹீரோயின் ஒரு ரேடியோ தொகுப்பாளர். மகளின் இருதய அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல வேண்டும். அதனால் தன்னுடைய பணியை ராஜினாமா செய்கிறார்.

ரேடியோ தொகுப்பாளராக கடைசி நாளில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அவருக்கு இறுதியாக ஒரு போன் கால் வருகிறது. அதன் பின்னர் நடக்கும் மர்ம சம்பவங்கள் தான் படத்தின் கதை.

OTT: அமேசான் ப்ரைம் வீடியோ
IMDB ரேட்டிங்: 6.5/10

பாராஸைட்: பல விருதுகளை அள்ளி குவித்த கொரியன் படம் தான் பாராசைட். படத்தின் ஹீரோ ரொம்பவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர்.

இவருக்கு பெரிய பணக்கார வீட்டில் வேலை கிடைக்கிறது. அதன் பின்னர் அவர் செய்யும் தில்லு முல்லு வேலைகளை டார்க் காமெடி ஆக படம் முழுக்க கொடுத்திருப்பார்கள். இந்த படம் வசூலிலும் பெரிய அளவில் ஹிட் அடித்தது.

OTT: அமேசான் ப்ரைம் வீடியோ
IMDB ரேட்டிங்: 8.5/10

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.