இளசுகளின் 6 கிரஷ் நடிகைகளை ஆன்ட்டி என ஒதுக்கப்பட்ட பரிதாபம்.. தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட அனுஷ்கா

கோலிவுட்டில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து இளசுகளின் கிரஷ் ஆக இருந்து வந்த ஒரு சில நடிகைகள் தற்பொழுது ஆன்ட்டி ரேஞ்ச்க்கு வந்து விட்டனர். அதிலும் தங்களது படங்களில் தற்போது முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை இழந்து துணை கதாபாத்திரங்களிலும் தலைகாட்டி வருகின்றனர். அப்படியாக இளசுகளின் 6 கிரஷ் நடிகைகளை ஆன்ட்டி என ஒதுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யார் என்பதை இங்கு பார்க்கலாம்.

பூனம் பஜ்வா: தமிழ் சினிமாவில் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் படத்தில் அறிமுகமானவர்தான் நடிகை பூனம் பஜ்வா. அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வந்த இவர் தற்பொழுது துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதிலும் அழகு பதுமையுடன் காணப்பட்டாலும் தற்பொழுது ஹீரோயின் என்ற அந்தஸ்தை இழந்து தனது படங்களில் ஆன்ட்டி கேரக்டரில் நடித்த வருகிறார்.

சினேகா: தமிழ் சினிமாவில் குடும்பப் பாங்கான முகத்தோற்றத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் புன்னகை அரசியாக இடம் பிடித்தவர் தான் நடிகை சினேகா. ஆரம்ப கால கட்டங்களில் முன்னணி நடிகையாக நடித்து பல ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார். ஆனால் தற்பொழுது முன்னணி நடிகர்களின் படங்களில் அண்ணி, அக்கா போன்ற துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

ஹன்சிகா மோத்வானி: சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் கொலு கொலு தேகத்துடன் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. முன்னணி நட்சத்திரமாக பல ஹிட் படங்களை கொடுத்த இவர் தற்பொழுது திருமணத்திற்கு பின்னர் சரிவரப்பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். இருந்தாலும் போட்டோ சூட் நடத்தி பட வாய்ப்புகளை பெற முயற்சி செய்து வருகிறார்.

ரித்திகா சிங்: தமிழ் சினிமாவில் இறுதி சுற்று திரைப்படத்தின் மூலம் அதிக அளவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை ரித்திகா சிங். தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அவை ரசிகர்களின் மத்தியில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. தற்பொழுது பட வாய்ப்பை அதிகரிப்பதற்காக போட்டோஷூட் நடத்தி அதன் மூலம் வாய்ப்பு தேடி வருகிறார். இருந்தாலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்வதற்கான வாய்ப்பு இல்லாமலேயே போய்விட்டது.

அனுஷ்கா ஷெட்டி: தெலுங்கில் அறிமுகமான இவர் தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, கார்த்தி, ஆர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகையாகவே இருந்து வந்தார். அதிலும் இஞ்சி இடுப்பழகி என்னும் திரைப்படத்தில் குண்டாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஆன்ட்டி நடிகையாகவே  மாற்றப்பட்டார். இதனால் முன்னணி நடிகை என்ற இவரின் கேரியரை போய்விட்டது என்றே சொல்லலாம்.

தமன்னா: தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரீட்சியமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை தமன்னா. அதன் பிறகு முன்னணி நடிகர்களான விஜய், அஜித் போன்ற நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார். சமீபகாலமாகவே சரிவரப் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வரும் இவர் தற்பொழுது ரஜினி உடன் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.

arun

Arun

அருண்- சினிமாபேட்டையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார்.

View all posts →