1. Home
  2. எவர்கிரீன்

பல கோடிகளில் சம்பளம் வாங்கும் 6 டாப் ஹீரோயின்கள்.. கல்யாணம், குழந்தைக்கு பின்னும் எட்ட முடியாத உயரத்தில் நயன்தாரா

பல கோடிகளில் சம்பளம் வாங்கும் 6 டாப் ஹீரோயின்கள்.. கல்யாணம், குழந்தைக்கு பின்னும் எட்ட முடியாத உயரத்தில் நயன்தாரா
ஹீரோக்களுக்கு நிகராக நடிகைகளும் உச்சகட்ட சம்பளத்தை வாங்கி வருகின்றனர்.

முன்பெல்லாம் சினிமாவில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு பெரிய அளவில் சம்பளம் கிடைக்காது. ஆனால் இப்போது அப்படி கிடையாது. ஹீரோக்களுக்கு நிகராக நடிகைகளும் உச்சகட்ட சம்பளத்தை வாங்கி வருகின்றனர். அந்த வகையில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் ஆறு ஹீரோயின்களை பற்றி இங்கு காண்போம்.

கீர்த்தி சுரேஷ் வாரிசு நடிகையாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ஒரு படத்திற்கு மூன்று கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.

காஜல் அகர்வால் விஜய், அஜித் உட்பட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருக்கும் இவர் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார். தன் பிரசவத்திற்காக நடிப்பிலிருந்து விலகி இருந்த காஜல் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் ஒரு படத்திற்கு நான்கு கோடி சம்பளமாக வாங்கி வருகிறார்.

பூஜா ஹெக்டே தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து இப்போது தெலுங்கு ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வரும் இவர் ஒரு படத்திற்கு 4 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார்.

திரிஷா 20 வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் இன்னும் அதே அழகுடன் இருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் பட்டையை கிளப்பிய நிலையில் தற்போது இவரின் மார்க்கெட்டும் எகிறியிருக்கிறது. அந்த வகையில் இவர் ஒரு படத்திற்கு நான்கு கோடி சம்பளமாக கேட்டு வருகிறார்.

சமந்தா சர்ச்சை நடிகையாக இருக்கும் இவர் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கிறார். அதேபோன்று தமிழிலும் பிரபலமாக இருக்கும் இவரின் நடிப்பில் தற்போது யசோதா திரைப்படம் வெளிவந்தது. அதைத்தொடர்ந்து உடல்நல பிரச்சனைக்கு ட்ரீட்மென்ட் எடுத்து வரும் சமந்தா ஒரு படத்திற்கு எட்டு கோடி சம்பளமாக பெறுகிறார்.

நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்று பெருமையுடன் அழைக்கப்பட்டு வரும் இவர்தான் அதிகபட்ச சம்பளம் வாங்கும் ஹீரோயினாக இருக்கிறார். ஹீரோக்களுக்கு நிகராக மாஸ் காட்டி வரும் இவர் ஒரு படத்திற்கு 10 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டிருக்கும் இவரின் கால்ஷூட் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பிசியாக இருக்கிறது.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.