2025-ல் தமிழ் சினிமா இழந்த 7 பெரிய நட்சத்திரங்கள்.. திரையுலகை உலுக்கிய துயரம்
தமிழ் திரைத்துறைக்கு 2025ஆம் ஆண்டு மிகக் கடினமான ஆண்டாக அமைந்தது. பல துறைகளில் தடம் பதித்த முன்னணி நடிகர்கள், பிரபல இயக்குநர்கள், திறமையான கலைஞர்கள் என ஏழு முக்கியமான திரை நபர்களை தமிழ் சினிமா இவ்வருடம் இழந்தது.
சரோஜா தேவி
சரோஜா தேவியின் மறைவு 2025ஆம் ஆண்டின் மிகப்பெரிய திரை இழப்பாக கருதப்பட்டது. தமிழ், கன்னட, தெலுங்கு, இந்தி என நான்கு மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவர், இந்திய சினிமாவின் காலத்தால் அழியாத நாயகிகளில் ஒருவராக விளங்கினார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற தொன்மையான நாயகர்களுடன் சூப்பர் ஹிட் படங்களில் ஜோடி. பாரம்பரிய குணநடிப்பிலும், கவர்ச்சியான காதல் கதைகளிலும், மெல்லிய உணர்ச்சி பார்வைகளிலும் தனித்துவம். அவரின் அழகு, நடிப்புத் திறன், ஸ்டைல் ஆகியவை 60–70களின் பெண்மணிக்கான அடையாளமாக இருந்தது.
2025 ஜூலை 14 அன்று பெங்களூருவிலுள்ள இல்லத்தில் வயது சார்ந்த உடல்நலக் குறைவு காரணமாக இறைவனடி சேர்ந்தார்.
மனோஜ் பாரதிராஜா
இயக்குனர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா, நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும் பல தளங்களில் திறமையை வெளிப்படுத்தியவர். 2025 மார்ச் மாதத்தில் இதயம் சம்பந்தமான உடல்நோயால் 48 வயதில் திடீரென மரணம். ஒரு மாதத்திற்கு முன் இதய அறுவை சிகிச்சை செய்திருந்தது இந்தத் துயரத்தை இன்னும் எதிர்பாராதவகையில் மாற்றியது
அபிநய் கிங்கர்
‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் கவனிக்கப்படும் அபிநய் கிங்கர், பல படங்களில் துணைப் பாத்திரங்களிலும், குரல் கொடுப்பதிலும் சிறப்பாகப் பணியாற்றியவர். கல்லீரல் நோயால் நீண்டநாள் சிகிச்சை பெற்று வந்த அவர், பொதுமக்களிடமும் உதவி கோரியிருந்தார். 2025 நவம்பர் 10 அன்று 44 வயதில் உயிரிழந்தார்.
ரோபோ சங்கர்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், திரைப்படங்களிலும் தனித்துவமான காமெடியால் பிரபலமான ரோபோ சங்கர், இளம் வயதிலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.
2025 ஏப்ரல் 16-ம் தேதி படப்பிடிப்பு ஸெட்டில் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி. பல உறுப்புகள் செயலிழப்பு காரணமாக 2025 செப்டம்பர் 18 அன்று 46 வயதில் மறைந்தார்.
ஏவிஎம் சரவணன்
AVM Productions இந்தியாவின் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஸ்டுடியோக்களில் ஒன்று. அதில் முக்கிய பங்காற்றியவர் ஏவிஎம் சரவணன். 2025 டிசம்பர் 8 அன்று காலமானார். தமிழ் சினிமாவின் பொற்கால தயாரிப்புகளை நினைவூட்டும் ஒரு பெயராக அவர் என்றென்றும் வாழ்வார்.
கோட்டா சீனிவாச ராவ்
தெலுங்கு சினிமாவின் முக்கிய நடிகர் என்றாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் பெரிய இடம்பிடித்தவர் கோட்டா சீனிவாச ராவ். 2025 ஜூலை 13 அன்று அவர் காலமானார். பிரபலமான மொழி மீறிய நடிகர்களில் அவர் ஒரு முக்கியமானவர்.
இயக்குநர் வி. சேகர்
எளிய கதைகளில் அழகான குடும்ப உணர்வுகளை உருவாக்கும் திறமையான இயக்குநராக வி.சேகர் விளங்கினார். ராமச்சந்திரா மருத்துவமனையில் 10 நாள்களுக்கு மேல் சிகிச்சை பெற்று வந்த அவர் 2025 நவம்பர் 14 அன்று 74 வயதில் மறைந்தார்.
