முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கத்தினால் ரசிகர்கள் மத்தியில் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும். மேலும் சில சமயங்களில் இந்த கூட்டணி இணைந்தால் மாபெரும் வெற்றி படத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கை ரசிகர் மத்தியில் இருக்கும். அவ்வாறு ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 8 படங்கள் எது என்பதை தற்போது பார்க்கலாம்.
பொன்னியின் செல்வன் 2 : சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. கல்கியின் பொன்னியன் செல்வன் நாவலை இரண்டு பாகங்களாக மணிரத்தினம் எடுத்துள்ளார். இதில் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
இந்தியன் 2 : ஷங்கர், கமலஹாசன் கூட்டணியில் வெளியான இந்தியன் படம் மாபெரும் வெற்றியடைந்தது. மீண்டும் இதே கூட்டணியில் இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தளபதி 67 : விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லனாக மிரட்டு இருந்தார். மாஸ்டர் படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த நிலையில் மீண்டும் விஜய், லோகேஷ் கூட்டணியில் தளபதி 67 படம் உருவாக இருக்கிறது.
வாடிவாசல் : தற்போது சூர்யா பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்த வருகிறார். இதைத்தொடர்ந்து வெற்றிமாறன், சூர்யா கூட்டணியில் வாடிவாசல் படம் உருவாகி வருகிறது. இந்த படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்படுவதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த படத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
கேப்டன் மில்லர் : அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா அருள் மோகன், ஜான் கொக்கன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் கேப்டன் மில்லர். இந்த படம் ஒரு வரலாற்று திரைப்படமாக எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கேப்டன் மில்லர் படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
அயலான் : சிவகார்த்திகேயன் தற்போது நடித்துள்ள பிரின்ஸ் படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. ஆனால் இப்படத்திற்கு முன்னதாகவே உருவாகிய படம் அயலான். இந்தப் படத்தை ஆர் ரவிக்குமார் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அயலான் படத்தின் ரிலீஸுக்காக காத்துக் கிடக்கின்றனர்.
சீயான் 61 : பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாக உள்ள படம் சியான் 61. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்க உள்ளார். அண்மையில் இப்படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
சூர்யா 42 : ரஜினியின் அண்ணாத்த படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா சூர்யாவின் 42வது படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்துடன் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.