90களின் கனவுக்கன்னி ஹீராவின் நடிப்பில் மறக்க முடியாத 5 படங்கள்.. இதயம் முரளியை கலங்கடித்த கீதா!

Heera: நடிகைகள் சிம்ரன், த்ரிஷாவுக்கு முன்னாடியே கட்டுக்கோப்பான உடல் அமைப்பு உடன் ரசிகர்களை கிரங்கடித்தவர் நடிகை ஹீரா ராஜகோபால்.

திடீரென நேற்று முதல் அஜித்தின் முன்னாள் காதலியாக வைரலாகிக்கொண்டிருக்கும் ஹீராவை கொண்டாடிய 80 மற்றும் 90களின் காலகட்டத்தில் வாழ்ந்தவர்களுக்கு தான் மீண்டும் அந்த காலம் நினைவுக்கு வந்துவிட்டு போயிருக்கும்.

ஹீரா யார் என தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த ஐந்து படத்தை தேடி கண்டுபிடித்து பார்த்து விடுங்கள்.

ஹீராவின் நடிப்பில் மறக்க முடியாத 5 படங்கள்

இதயம்: இதயம் முரளியை இன்று வரை டிரெண்டாக்கி கொண்டிருப்பவர்களுக்கு முரளி உருகி உருகி காதலித்த கீதாவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா என்ற பாட்டுக்கு ஏத்த மாதிரி காட்டன் புடவையுடன் ஹீரா படம் முழுக்க வருவார்.

தமிழில் அவருக்கு இது முதல் படம் என்றாலும் இந்த படத்தின் மூலம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றார்.

திருடா திருடா: மணிரத்தினம் இயக்கத்தில் பிரசாந்த் நடித்த திருடா திருடா படத்தில் ஹீரா கதாநாயகியாக நடித்திருந்தார்.

வீரபாண்டி கோட்டையிலே என்னும் பாடலின் நடனமாடும் ஹீராவை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது.

அதேபோன்று இந்தப் படத்தில் வரும் ராசாத்தி என் உசுரு என்னதில்ல பாடலும் பெரிய அளவில் ஹிட் அடித்தது.

காதல் கோட்டை: நடிகர் அஜித்குமாருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த காதல் கோட்டை படத்தில் ஹீரா இரண்டாவது ஹீரோயின் ஆக நடித்திருப்பார்.

அஜித்தை ஒருதலையாக காதலிக்கும் கேரக்டரில் வரும் இவர் ஆணழகா உன் அடிமை இதோ பாட்டில் அஜித்துடன் படு கிளாமராக நடித்திருப்பார்.

அவ்வை ஷண்முகி: கமலஹாசன் மற்றும் மீனா நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த அவ்வை சண்முகி படத்தில் ஹீரா ரத்னா என்னும் கேரக்டரில் நடித்திருப்பார்.

கமலுக்கு இணையான டான்ஸ், காமெடி என தன்னுடைய மற்றொரு பரிணாமத்தை இந்த படத்தில் காட்டி இருப்பார்.

சதிலீலாவதி: கமலஹாசன், ரமேஷ் அரவிந்த், கல்பனா, கோவை சரளா என நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்த சதி லீலாவதி படத்தில் ஹீரா பிரியா என்னும் கேரக்டரில் நடித்திருப்பார்.

படம் முழுக்க வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அளவுக்கு காமெடி காட்சிகள் இருக்கும்.