காதல் பிசாசுன்னு கிறுக்கு பிடிக்க செய்த மீரா ஜாஸ்மின்.. 30 படங்களில் வெறும் மூன்றே ஹிட் தான்
நடிகை மீரா ஜாஸ்மின் ஹிட் கொடுத்த 3 படங்கள்.
Actress Meera Jasmin hits: movies: மலையாள நடிகையான மீரா ஜாஸ்மின், தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். சுமார் 20 வருஷத்தில் 30க்கு மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், ' புடுங்குனதெல்லாம் தேவையில்லாத ஆணி' என்பது போல் வெறும் மூன்றே படம் தான் ஹிட் அடித்து இருக்கிறது. இவர் தமிழில் அறிமுகமான முதல் படமான ரன் படமே ஹிட் தான். இந்த படத்தில் ‘காதல் பிசாசே’ என்ற பாடலில் செம க்யூட்டாக நடனமாடி இளசுகளை வசியம் செய்த மீரா ஜாஸ்மின், தன்னுடைய அழகால் ரசிகர்களை மயக்கி பைத்தியம் பிடிக்க வைத்தார். இந்த படத்தில் மாதவனுக்கு சரியான ஜோடி என மீரா ஜாஸ்மின் கொண்டாடப்பட்டார். இந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலிலும் பட் டையை கிளப்பியது. ரன் படத்திற்கு பின் பாலா, புதிய கீதை, ஆஞ்சநேயா போன்ற தோல்வி படங்களை கொடுத்து, அதன் பின்பு தான் ஆயுத எழுத்து என்ற படத்தில் சசி என்ற கேரக்டரில் நடித்து தமிழில் இரண்டாவது ஹிட் படத்தை கொடுத்தார்.

