1. Home
  2. எவர்கிரீன்

எல்லா கேரக்டரும் இந்த 5 ஹீரோயின்களுக்கு அத்துபடி.. பாரதிராஜா கண்ணில் விரலை விட்டு ஆட்டிய ரெண்டு நடிகைகள்

எல்லா கேரக்டரும் இந்த 5 ஹீரோயின்களுக்கு அத்துபடி.. பாரதிராஜா கண்ணில் விரலை விட்டு ஆட்டிய ரெண்டு நடிகைகள்

5 Heroines Did All Roles: அழகு இருந்தால் மட்டும் சினிமாவில் நீடித்து விட முடியாது திறமையும் இருந்தால் தான் முன்னணி அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். அந்த வகையில் எந்த கேரக்டராக இருந்தாலும் அசால்டாக நடித்து தள்ளும் ஐந்து ஹீரோயின்கள் பற்றி இங்கு காண்போம். ஸ்ரீப்ரியா: ரஜினி, கமலுடன் அதிக படங்களில் இணைந்து நடித்திருக்கும் இவர் 70, 80 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். அதேபோல் மாடர்ன் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி கிராமத்து கதாபாத்திரமாக இருந்தாலும் சரி இவர் தத்ரூபமாக நடித்து விடுவார். அதிலும் நீயா படத்தில் இவர் பாம்பாக நடித்து மிரட்டியிருப்பார். அதேபோல் வாழ்வே மாயம், ஆட்டுக்கார அலமேலு என இவருடைய நடிப்பு திறமையை பல படங்களில் நிரூபித்து இருக்கிறார். ஸ்ரீதேவி: தமிழ் ரசிகர்கள் மயிலு என செல்லமாக அழைக்கப்படும் இவர் பாலிவுட் பக்கம் சென்றாலும் கூட தமிழில் இவருக்கான இடம் அப்படியே தான் இருந்தது. அந்த அளவுக்கு இவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்தார். அந்த வகையில் 16 வயதினிலே, மூன்றாம் பிறை என பல படங்களை அவருடைய நடிப்புக்கு உதாரணமாக சொல்லலாம். இதில் பாரதிராஜாவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய நடிகை என்ற பெருமையும் இவருக்கு உண்டு. ஊர்வசி: தற்போது அம்மா வேடங்களில் கலக்கி வரும் இவர் கமல், பிரபு என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அதிலும் காமெடி கலந்த இவருடைய நடிப்பு ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். அந்த வகையில் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் இவர் அதை ஒரு கை பார்த்து விடுவார். ரேவதி: 80 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்த இவர் மண்வாசனை, புதுமைப்பெண் போன்ற பல படங்களில் தன் திறமையை நிரூபித்திருக்கிறார். பாரதிராஜாவின் அறிமுகமான இவர் அவரையே வியக்கும் அளவுக்கு மண்வாசனை படத்தில் நடித்தாராம். அதனாலேயே பாரதிராஜா இவருக்காக பல காட்சிகளை மாற்றியமைத்து கொடுத்தாராம். அந்த அளவுக்கு திறமையான ஒரு நடிகையாக ரேவதி இருக்கிறார். அதேபோல் எமோஷனல் காமெடி என அனைத்திலும் ஒரு ரவுண்டு வந்த பெருமையும் இவருக்கு உண்டு. ராதிகா: பாரதிராஜாவின் கண்டுபிடிப்பான இவர் கிழக்கே போகும் ரயில் படத்தில் அற்புதமாக நடித்திருப்பார். அதை தொடர்ந்து வில்லேஜ் கதாபாத்திரம் மட்டுமல்லாமல் மாடர்ன் கேரக்டரிலும் கலக்கியிருக்கிறார். அந்த வகையில் கமல், ரஜினி, விஜயகாந்த் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக இவர் நடித்திருக்கிறார். அதேபோல் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிப்பது இவருக்கு கைவந்த கலை. மேலும் அக்கா, அண்ணி, அம்மா, பாட்டி போன்ற அனைத்து கதாபாத்திரங்களிலும் இவர் நடித்து ஆல் இன் ஆல் அழகு ராணி ஆக இருக்கிறார்.
Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.