சிங்கப்பெண்ணில் பத்து லட்சத்திற்காக புத்தியை இழந்த ஆனந்தி, அன்பு.. நேரம் பார்த்து சிக்க வைத்த மித்ரா

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் இந்த வாரம்ஆனந்திக்கு பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. கம்பெனியில் ஆனந்திக்கு சப்போர்ட்டாக இருப்பது அன்பு மற்றும் மகேஷ் தான். இதில் மகேஷ் இனிமேல் ஆனந்தி இருக்கும் பக்கமே வரக்கூடாது என அவனுடைய அப்பா உத்தரவு போட்டு விட்டார்.

தனக்கு இருக்கும் பவரை வைத்து கருணாகரன் ஆனந்தியை நெருங்காதவாறு இவ்வளவு நாள் அன்பு பார்த்துக் கொண்டான். அதையும் மித்ரா போட்ட திட்டத்தால் முறியடித்து விட்டார்கள். கருணாகரன் தன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு ஆனந்தியை சித்திரவதை செய்து கொண்டிருக்கிறான்.

பண சிக்கல்:

இது போதாது என்று ஆனந்தியின் அப்பா வாங்கிய கடனுக்காக அவர்களுடைய சொந்த நிலத்தை அபகரிக்க திட்டமிட்டு இருக்கிறான் சுயம்புலிங்கம். இந்த விஷயம் ஆனந்திக்கு தெரியவே கூடாது என அழகப்பன் முடிவெடுத்து இருந்திருந்தார்.

ஆனால் விஷயம் கைமீறி போனதால் ஆனந்தியின் அக்கா அவளுக்கு போன் செய்து சொல்லி விடுகிறாள். ஆனந்தி ஹாஸ்டலில் வந்து நடந்த எல்லாத்தையும் பற்றி தன்னுடைய தோழிகளிடம் சொல்லி புலம்புகிறாள். இதை கேட்டுக் கொண்டிருந்த வார்டன் தன்னால் முடிந்த உதவியை செய்கிறேன் என சொல்கிறார்.

வார்டன் ஒரு சில நபருக்கு போன் செய்து பணத்தை கேட்டு பார்க்கிறார். ஆனால் அவருக்கு பணம் கிடைக்கவில்லை. வாழ்க்கையில் எந்த நிலைமையிலும் யாரிடம் போய் நிற்க கூடாது என்று நினைத்தோமோ அவரிடமே உதவி கேட்க வைக்கிறாரே இந்த கடவுள் என வார்டன் தன்னுடைய நிலைமையை எண்ணி நொந்து கொள்கிறார்.

வார்டன் – தில்லை நாதன்

அப்படி அவர் யாருக்குத்தான் போன் பண்ண போகிறார் என்று பார்த்தால், மகேஷின் அப்பா தில்லைநாதனுக்கு தான் போன் செய்கிறார். ஆனால் தில்லைநாதன் அந்த சமயத்தில் வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறார்.

ஒரு கணம் தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்கிறார் வார்டன். ஆனந்தியை அழைத்து நீ நேரடியாகவே மகேஷ் வீட்டுக்கு போ, நீ அங்க போனால் மட்டும்தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும், மகேஷிடம் பணத்தைக் கேட்டு வாங்கு என்று சொல்லி அனுப்புகிறார்.

அதே நேரத்தில் அன்பு தன்னுடைய அம்மாவிடம் ஆனந்தியின் பிரச்சனையை பற்றி சொல்கிறான். வீட்டில் இருக்கும் நகை இல்ல நம் வீட்டு பத்திரத்தை வைத்து காசு ரெடி பண்ணி ஆனந்திக்கு கொடுக்கலாம் என்கிறான். இது அன்புவின் அம்மாவுக்கு மிகப்பெரிய கோபத்தை உண்டு பண்ணுகிறது.

கொதித்தெழுந்த மகேஷின் அம்மா:

அந்த பொண்ணுக்காக எங்கேயாவது காசு வாங்கிட்டு வந்து கடன்காரனா நின்னனா உனக்கு அவ்வளவு தான் என்று திட்டி விட்டுப் போய் விடுகிறார். ஆனந்தி மகேஷிடம் காசு வாங்க போவதை மித்ரா தெரிந்து கொள்கிறாள். ஆனந்தி போவதற்கு முன்னாடியே மித்ரா மகேஷின் அம்மாவுக்கு போன் பண்ணி கம்பெனியில் நடக்கும் பிரச்சனைகளையும், ஆனந்தி காசு வாங்க வருவதையும் சொல்லி விடுகிறாள்.

இதனால் மகேஷின் அம்மாவுக்கு ஆனந்தி மீது ரொம்ப கோவம் வருகிறது. சரி மித்ரா நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்லிவிட்டு போனை வைத்து விடுகிறார். இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மகேஷின் வீட்டிற்கு போகும் ஆனந்தியை அவனுடைய அம்மா தடுத்து விடுகிறார்.

மேலும் தில்லைநாதன் ஆனந்தியிடம் நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். இனி என் மகன் மகேஷிடம் இருந்து ஒதுங்கியே நடந்து கொள் என்று சொல்லிவிடுகிறார். அழுது கொண்டே ஹாஸ்டலுக்கு வரும் ஆனந்தி வார்டனிடம் நடந்த விஷயத்தை சொல்கிறாள்.

நீ பணம் கேட்க போவது அவனுடைய அம்மாவுக்கு எப்படி தெரிந்தது என வார்டன் சந்தேகப்படுகிறார். அதே நேரத்தில் இந்த இடத்தை காப்பாற்ற முடியவில்லை என்றால் நான் உயிருடன் இருந்தே புண்ணியம் இல்லை என சொல்லி அழகப்பன் அழுவது போல் இந்த ப்ரோமோ காட்டப்பட்டு இருக்கிறது.

புத்தியை இழந்த அன்பு, ஆனந்தி:

இந்த பத்து லட்ச ரூபாய் பிரச்சனையில் அன்பு மற்றும் ஆனந்தி இருவருமே தங்களுடைய புத்தியை இழந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஆனந்தி நினைத்திருந்தால் மகேஷுக்கு போன் பண்ணி கூட இந்த காசு விஷயத்தை பற்றி பேசி இருக்கலாம்.

ஏற்கனவே மகேஷின் அப்பா மற்றும் அம்மாவுக்கு ஆனந்தியின் மீது நல்ல எண்ணம் இல்லை. அப்படி இருக்கும் பொழுது 10 லட்சம் கேட்டு ஆனந்தி இரவு நேரத்தில் வீடு தேடி போனது ரொம்பவே தப்பான விஷயம். இதனால் ஆனந்தி பணத்துக்காக தான் தன்னுடைய மகனிடம் நட்பாக பழகுகிறாள் என்ற தவறான எண்ணம் அவர்களுக்கு வர வாய்ப்பு இருக்கிறது.

ஏற்கனவே அன்புவின் அம்மாவுக்கு ஆனந்தி மீது மனக்கசப்பு இருந்தது. தன்னுடைய கணவரின் திதி நாளில் ஆனந்தி வீட்டிற்கு வந்து சகஜமாக பழகியதால் அவருடைய மனம் முழுதாக மாறி இருந்தாலும், அன்பு ஆனந்தியுடன் நெருங்கி விடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

இப்படிப்பட்ட சமயத்தில் அன்பு வீட்டில் இருக்கும் நகை அல்லது வீட்டு பத்திரத்தை ஆனந்திக்காக கேட்டது சகித்துக் கொள்ளவே முடியாத விஷயம். இதனால் அன்புவின் அம்மா மீண்டும் ஆனந்தி மீது கோபப்பட அதிகவே வாய்ப்பு இருக்கிறது. அன்பு மற்றும் மகேஷ் இருவராலும் உதவி செய்ய முடியாத நிலையில், ஆனந்தி தன்னுடைய சொந்த நிலத்தை எப்படி காப்பாற்றுகிறார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.