1. Home
  2. எவர்கிரீன்

அட்லி இயக்கிய 5 படங்களின் மொத்த வசூல் ரிப்போர்ட்..

அட்லி இயக்கிய 5 படங்களின் மொத்த வசூல் ரிப்போர்ட்..
அட்லி இயக்கிய ஐந்து படங்களின் வசூல் விவரங்களை பார்க்கலாம்.

Director Atlee: இயக்குனர் அட்லி குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட ஒருவராவார். இவரை சுற்றி எத்தனை நெகடிவ் கமெண்ட்கள் வந்தாலும் அடுத்தடுத்து வெற்றியை நோக்கி தான் இவருடைய சினிமா பயணம் இருக்கிறது. இவர் எடுத்த படங்களை எல்லாம் மற்ற படங்களின் காப்பி என எத்தனை ட்ரோல் செய்தாலும் தமிழ் சினிமாவில் பிளாப் கொடுக்காத இயக்குனராக இருக்கிறார். இவர் இயக்கிய ஐந்து படங்களின் வசூல் விவரங்களை பார்க்கலாம்.

ராஜா ராணி: தமிழ் சினிமாவின் அழகிய காதல் படங்களில் ராஜா ராணியும் ஒன்று. இந்த படம் இன்று வரை ரசிகர்களின் ஃபேவரிட் லிஸ்டில் இருக்கிறது. காதல், காமெடி, சென்டிமென்ட் என, ஒரு புதுமுக இயக்குனர் இயக்கிய படம் என்று தெரியாத அளவுக்கு அட்லீஸ்ட் இந்த படத்தை சிறப்பாக எடுத்திருந்தார். 13 கோடியில் உருவான இந்த படம் 80 கோடி வரை வசூல் செய்தது.

தெறி: அட்லிக்கு இரண்டாவது படமே தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பாக அமைந்தது. விஜய் மற்றும் சமந்தா கூட்டணியில் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆக அமைந்தது. சுமார் 65 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம், 158 கோடி வசூல் செய்தது.

மெர்சல்: விஜய் மற்றும் அட்லி இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்த மெர்சல் படம் ரிலீசுக்கு முன்பு பல சிக்கல்களை சந்தித்தது. அட்லி இந்த படத்தில் அரசாங்கத்திற்கு எதிராக ரொம்பவும் தைரியமாக சில விஷயங்களை பேசி இருந்தார். பல வருடங்களுக்கு பிறகு விஜய் இந்த படத்தில் டூயல் ரோலில் நடித்திருந்தார். 120 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 250 கோடி வரை வசூல் செய்தது.

பிகில்: அட்லி, விஜயின் ஹாட்ரிக் கூட்டணியாக அமைந்த படம் பிகில். இந்த படம் விளையாட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. பிகில் படத்தில் இதுவரை பார்க்காத வித்தியாசமான கேரக்டரில் தளபதி நடித்திருந்தார். 180 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 300 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு தான் அட்லிக்கு, ஷாருக்கான் உடன் நல்ல நட்பு ஏற்பட்டது.

ஜவான்: அட்லியின் பாலிவுட் என்ட்ரி ஆக அமைந்த படம் தான் ஜவான். கடந்த ஏழாம் தேதி ரிலீஸ் ஆன இந்த படம் முதல் நாள் கலெக்ஷனிலேயே 125 கோடி வசூல் செய்திருக்கிறது. வார இறுதி நாட்கள் ஆன இன்றும், நாளையும் இது இரட்டிப்பாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் ஜவான் படம் ஆயிரம் கோடி வசூலிக்கும் என சினிமா வல்லுனர்கள் கணித்திருக்கிறார்கள்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.